டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை தந்த பயிற்சி.. பிரதமர் மோடி அருகே செங்கோட்டையில் நின்றாரே.. அந்த பெண் அதிகாரி யார் தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: நேற்று பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றிய போது அவருடன் இருந்த பெண் அதிகாரி ஒருவர் நாடு முழுக்க கவனம் ஈர்த்து இருக்கிறார்.

நாட்டின் 74வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நாடு முழுக்க மாநில முதல்வர்கள் நேற்று கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள். சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேசிய கொடியேற்றி வைத்தார்.

கொரோனா பாதிப்பு, எல்லை பிரச்சனை என்று பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி இன்று தனது உரையில் குறிப்பிட்டார். கொரோனா பரவலுக்கு இடையே கடும் கட்டுப்பாடுகளுடன் நேற்று கூட்டம் நடைபெற்றது.

Recommended Video

    Modi Red Fort Speech: சீனா, பாகிஸ்தானுக்கு நாம் தக்க பதிலடி கொடுத்து வருகிறோம்

    உங்களின் கோழைத்தனம்தான் நம் மண்ணில் சீனா ஊருடுவ முழு காரணம்.. மோடி மீது ராகுல் பாய்ச்சல் உங்களின் கோழைத்தனம்தான் நம் மண்ணில் சீனா ஊருடுவ முழு காரணம்.. மோடி மீது ராகுல் பாய்ச்சல்

    பாதுகாப்பு வீரர்

    பாதுகாப்பு வீரர்

    இந்த நிலையில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடிக்கு அருகே கருப்பு உடை அணிந்த ராணுவ வீராங்கனை ஒருவர் பாதுகாப்பிற்கு நின்றார். சாதாரண பாதுகாப்பு அதிகாரி என்பதையும் தாண்டி, இவருக்கு பிரதமர் மோடிக்கு அருகில் இடம் அளிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் இவர் மட்டும் தனியாக சிறப்பு உடை அணிந்து இருந்தார்.

    புன்னகை

    புன்னகை

    பிரதமர் மோடி தனது உரையை தொடங்கும் முன் இவரை பார்த்து புன்னகைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு நேற்று பிரதமர் மோடி கொடி ஏற்றிய போது, அவருக்கு உதவியாக இவர் நின்றார். மோடிக்கு கொடி ஏற்றும் போது இவர் உதவினார். பொதுவாக மோடி இது போல கொடி ஏற்றும் நேரங்களில் பிறரின் உதவியை பெற்றது இல்லை.

    உதவி செய்தார்

    உதவி செய்தார்

    ஆனாலும் நேற்று பிரதமர் மோடியுடன் சேர்ந்து இவர் கொடி ஏற்றினார். இதன் மூலம் தேசம் முழுக்க இவர் யார் என்று கேள்வி எழுந்தது. இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு மரியாதை என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். பெண் அதிகாரி ஒருவருக்கு உயரிய மேடையில் மதிப்பளிக்க வேண்டும் என்று முடிவு செய்து, மத்திய அரசு இவருக்கு மதிப்பு கொடுத்ததாக கூறுகிறார்கள்.

    யார் இவர்?

    யார் இவர்?

    அதிலும் இந்த குறிப்பிட்ட அதிகாரியின் பெயர் மேஜர் ஸ்வேதா பாண்டே. இவர்தான் கடந்த இரண்டு மாதம் முன் ரஷ்யாவில் நடந்த ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்டவர். அங்கு போர் வெற்றி கொண்டாட்டத்தில் இந்திய படைகள் மரியாதை அணிவகுப்பு நடத்தியது. இந்த அணிவகுப்பில் இந்திய படைகளை முன்னின்று வழி நடத்தியது, மேஜர் ஸ்வேதா பாண்டேதான்.

    ரஷ்யா எப்படி?

    ரஷ்யா எப்படி?

    இவர்தான் அந்த அணிவகுப்பில் இந்திய கொடியை ஏந்தி சென்றார். மேஜர் ஸ்வேதா பாண்டே சென்னையில்தான் ராணுவ பயிற்சி பெற்றார். ஆம் சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் இவர் பயிற்சி பெற்றார். சென்னையில் இவர் தனித்து சிறந்த அதிகாரியாக விளங்கி உள்ளார். பயிற்சியில் முதல் இடம் பிடித்து அதற்கான விருதையும் வாங்கி உள்ளார் .

    சென்னையை சேர்ந்தவர்

    சென்னையை சேர்ந்தவர்

    மேஜர் ஸ்வேதா பாண்டே உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் இருக்கும் முக்கியமான பெண் அதிகாரியாக இவர் பார்க்கப்படுகிறார். இவருக்கு இந்திய ராணுவத்தில் விரைவில் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். பிரதமர் மோடி நேற்று இவருக்கு உயரிய மேடையில் மரியாதை அளித்தது, பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    English summary
    Who the lady officer in black uniform helped PM Modi in Red fort during Independence day?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X