டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்களவை துணை சபாநாயகர் பதவி... பாஜகவின் மெகா ஆஃபர்.. வாய்ப்பு யாருக்கு... ஒய்.எஸ்.ஆர்.காங்..திமுக..?

Google Oneindia Tamil News

டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், துணை சபாநாயகர் தேர்தல் குறித்த பார்வை அவசியமாகிறது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்து மாதங்கள் பல உருண்டோடிவிட்டன. ஆனால் இன்னும் மக்களவை துணை சபாநாயகர் தேர்தல் நடத்தப்படவில்லை.

சுமார் ஒன்றரை ஆண்டுகளாக துணை சபாநாயகர் இல்லாத அவையாகவே மக்களவை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

திமுக எம்பிக்கு போனை போட்ட ஸ்டாலின்.. 10 நிமிடம் விடாமல் புலம்பி தள்ளிய சீனியர்.. என்ன நடந்தது? திமுக எம்பிக்கு போனை போட்ட ஸ்டாலின்.. 10 நிமிடம் விடாமல் புலம்பி தள்ளிய சீனியர்.. என்ன நடந்தது?

சட்ட விதி

சட்ட விதி

இந்திய அரசியலமைப்பு சட்டவிதி 93-ன் படி மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் இருவரை, மக்களவையின் சபாநாயகராகவும், துணை சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்க வேண்டும். மக்களவையை பொறுத்தவரை எதிர்கட்சியை சேர்ந்த ஒருவரே துணை சபாநாயகராக இருக்க வேண்டும் என்பது மரபு. அந்தவகையில் அந்த எதிர்கட்சி திமுகவா அல்லது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியா என்பது தான் இப்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வி.

இரண்டு பேர்

இரண்டு பேர்

தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேர் மக்களவை துணை சபாநாயகர் பதவியை அலங்கரித்துள்ளனர். 1980-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை மக்களவை துணை சபாநாயகராக திமுகவை சேர்ந்த லட்சுமணன் என்பவர் இருந்துள்ளார். அதேபோல் அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை 1985 முதல் 1989 வரை மற்றும் 2014 முதல் 2019 வரை என இரண்டு முறை மக்களவை துணை சபாநாயகராக இருந்திருக்கிறார்.

திமுக ஏற்குமா?

திமுக ஏற்குமா?

நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தில் இருக்கும் திமுகவுக்கு மக்களவை துணை சபாநாயகர் பதவி தரப்படுமா தந்தால் அதனை திமுக ஏற்குமா என்பது தான் டெல்லியில் விவாதப்பொருளாக உள்ளது. கடந்த முறை ஆளுங்கட்சிக்கு அடுத்த நிலையில் காங்கிரஸ் இருந்தும் அந்தக் கட்சிக்கு மக்களவை துணை சபாநாயகர் பதவி தரப்படவில்லை. அதிமுகவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல் இந்தமுறையும் தமிழகத்திற்கு துணை சபாநாயகர் என்ற ஜாக்பாட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் ஸ்டாலின், மக்களவை துணை சபாநாயகர் பதவியை திமுகவுக்கு பெற தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. இதனிடையே தென்னிந்தியா கோட்டாவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் ஆட்சி மேலிடத்தின் பரிசீலனையில் உள்ளது. மக்களவை துணை சபாநாயகர் தேர்வு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Who will be given the post of Deputy Speaker of the Lok Sabha?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X