டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நித்தியானந்தா சீரியஸாவே இறங்கிட்டாரு.. நாம காமெடி பண்ணலாமா.. வாங்க! கூடமாட ஒத்தாசைக்கு!

Google Oneindia Tamil News

டெல்லி: நித்யானந்தாவின் கைலாசா நாடு எந்த திசையில் இருக்கு.. என்று கூட தெளிவாக தெரியாத நிலையில் அவர் விடுத்துள்ள திடீர் அறிவிப்புதான் இப்போது நாட்டு மக்களின் காமெடி பேசு பொருளாக மாறியுள்ளது.

Recommended Video

    Nithyananda அதிரடி | Reserve Bank Of Kailasa | Oneindia Tamil

    நித்யானந்தா செய்வது எல்லாமே காமெடிதான். சீரியஸாக இருந்தாலும் இவரது செய்திகளை படித்துவிட்டால் போதும் கலகல மூடிற்கு வந்துவிடலாம்.

    நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் விநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். கைலாசாவுக்கான ரிசர்வ் வங்கியை தொடங்கிவிட்டாராம்.

    சமயபுரம் மாரியம்மனின் பச்சைப்பட்டினி விரதம் முடிந்தவுடன் கொரோனா ஓடிவிடும் - நித்யானந்தாசமயபுரம் மாரியம்மனின் பச்சைப்பட்டினி விரதம் முடிந்தவுடன் கொரோனா ஓடிவிடும் - நித்யானந்தா

    வெளிநாட்டுக்கு ஒன்று

    வெளிநாட்டுக்கு ஒன்று

    உள்நாட்டுக்கு என ஒரு கரென்சியையும் வெளிநாட்டுக்கு என ஒரு கரன்சியையும் ரெடி செய்துள்ளாராம். 300 பக்கம் கொண்ட பொருளாதார கொள்கைகளையும் வகுத்துள்ளதாக தெரிவிக்கிறார். இந்த நிலையில் நித்யானந்தா தொடங்கியுள்ள ரிசர்வ் வங்கியை நிர்வகிப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பேசாமல் நீரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்டோரை வங்கியின் கவர்னராக நியமிக்கலாமே என கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

    வேதனை

    வேதனை

    ஒரு வேளை தனது பிடரியில் உள்ள யாரேனும் ஒருவரை நியமிக்கலாம். கொஞ்சமும் தனது உடை, கழுத்தில் அணிந்துள்ள ருத்ராக்ஷைக்கு மதிப்பு கொடுக்காமல் வைரமுத்துவை கண்டபடி பேசிய சிஷ்யைக்கு அந்த பொறுப்பு வழங்கப்படுமா? இல்லாவிட்டால் இந்தியாவின் நிதித் துறை அமைச்சராக தன்னை நியமிக்கவில்லை என்ற வேதனை சுப்பிரமணியன் சுவாமியிடம் உள்ளது. அவரைப் போடுவாரா என்றும் நக்கலாக கேட்டு வருகின்றனர்.

    ரிசர்வ் வங்கி

    ரிசர்வ் வங்கி

    கைலாசா ரிசர்வ் வங்கியின் கவர்னராக அவரை நியமித்து அவரது காயத்திற்கு நித்தி மருந்திடுவாரா என சமூகவலைதளங்களில் யூகங்கள் என்ற பெயரில் காமெடிகள் ரெக்கை கட்டி பறக்கின்றன. ஒரு வேளை யாரையும் நம்பாமல் அவரே கவர்னராக இருப்பாரா? கைலாசா நாட்டுக்கு கொடி, பாஸ்போர்ட் ரெடி, கரன்சி ரெடி, பேங்க் ரெடி, அதன் அதிபரும் நியமிச்சாச்சு (வேற யாரு நம்ம நித்திதான்).

    அமைச்சரவை

    அமைச்சரவை

    அப்ப இன்னும் பாக்கியிருக்கிறது அந்த நாட்டிற்கான பிரதமர் யார், அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவார்கள். எந்த ஒரு நாடாக இருந்தாலும் வெளியுறவுத் துறை அமைச்சர் என்பது முக்கியம். அது போல் கைலாசாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் யாராக இருப்பார்கள், ஒரு வேளை அந்த பதவி ரஞ்சிதாவுக்கு கொடுக்கப்படுமா? என்றும் பலர் கலாய்க்கின்றனர்.

    பெண்கள் நலம்

    பெண்கள் நலம்

    ஏனெனில் இந்தியாவில் நித்திக்கு சொந்தமான ஆசிரமங்களுடன் நல்லுறவை பேணுவதற்கு ரஞ்சிதாதான் சரிப்பட்டு வருவார் என நித்தி நினைக்கலாம். மற்ற அமைச்சர்களாக தன் ஆசிரமத்திற்கு அதிகமாக சொத்து பத்துகளை எழுதியவர்களுக்கு வாய்ப்பு தரப்படுமா? பெண்கள் நலத்துறை மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் பதவி யாருக்கு? அவற்றை வேறு யாரிடமாவது கொடுத்தால் தேவையில்லாத பிரச்சினையாகிவிடும் என நினைத்து பெண்களின் காவல் தெய்வம் நித்தியே வைத்துக் கொள்வாரா?

    சண்டை

    சண்டை

    இப்படி நிறைய வேலை தலைக்கு மேல் இருக்கிறது. கைலாசாவுக்கு செல்ல விமான போக்குவரத்து இல்லாத நிலையில் எப்படி வருவது, விமானத்தை எங்கு கொண்டு போய் நிறுத்துவார்கள்.. கைலாசாவில் ரன்வேயெல்லாம் போட்டாச்சா.. இல்லாட்டி ஏதேனும் புஷ்பக விமானம் வந்து நம்மை அழைத்து செல்லுமா? முப்படைகள் எப்போது அமைக்கப்படும்? அதற்கு ஆட்கள் எப்படி தேர்வு செய்யப்படுவர், சண்டைனு வந்துட்டா இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான், சீனாவுக்கு கைலாசா நாடும் பதிலடி கொடுக்குமா? என்றும் பலர் கலாய்க்கினறனர்.

    நித்தியானந்தா

    நித்தியானந்தா

    இப்படி ஏகப்பட்ட வேலை இருக்கு. அதை பற்றியெல்லாம் யோசிக்காமல் இந்த மக்கள் ஏன்தான் கொரோனா, அமெரிக்கா தேர்தல், இந்திய பொருளாதாரம் என தேவையில்லாததை எல்லாம் யோசிக்கிறார்களோ தெரியவில்லை. தனியொருவனாக நித்தியானந்தா மட்டும் எவ்வளவு வேலைதான் பார்ப்பாருங்க! கொஞ்சமாவது யோசிங்க! சூரியனே நித்தியானந்தா கூறியதற்கு பிறகுதான் உதிக்கும், ஆனால் நாங்க மட்டும் எப்படி அவர் கூறுவதற்கு முன்னாடியே அவருக்கு உதவுவது என நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது!.. இப்படித்தான் கற்பனையில் நித்தியானந்தாவை பலரும் சமூக வலைதளங்களில் ஓட்டிக் கொண்டுள்ளனர்.

    English summary
    Who will be the first Governor of Reserve Bank of Kailasa? Who will be the president of Kailasa? Where is the Cabinet?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X