டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சரி மோடி மறுபடியும் பிரதமராய்ட்டாரு.. அடுத்த நிதியமைச்சர் பதவி யாருக்கு??

Google Oneindia Tamil News

Recommended Video

    Who is Next Finance minister? : மோடி மறுபடியும் பிரதமரானால், நிதியமைச்சர் பதவி யாருக்கு?- வீடியோ

    டெல்லி: மீண்டும் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தால் நிதியமைச்சர் பதவி யாருக்குக் கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    நிதியமைச்சராக அருண் ஜேட்லி மிகப் பெரிய அதிருப்தியை மக்கள் மத்தியில் பெற்று மோசமான நிதியமைச்சர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். காரணம், ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவைதான்.

    இந்த நிலையில் மோடி மீண்டும் பிரதமரானால், அடுத்த நிதியமைச்சர் யார் என்ற விவாதம் கிளம்பி விட்டது. இதுதொடர்பாக சில பெயர்கள் அடிபடுகின்றன.

    ஊரெல்லாம் ஒரு மாதிரியான நிலவரம்.. தேமுதிகவினரின் மனதில் மட்டும் கவலை கலவரம்! ஊரெல்லாம் ஒரு மாதிரியான நிலவரம்.. தேமுதிகவினரின் மனதில் மட்டும் கவலை கலவரம்!

    கஷ்ட நிலை

    கஷ்ட நிலை

    யார் அடுத்த நிதியமைச்சராக வந்தாலும் நிதி நிலையைப் பார்த்து நிச்சயம் மயங்கிப் போய் விடுவார்கள் என்று பொருளாதார நிபுணர்கள் ஏற்கனவே கூறி வருகின்றனர். அந்த நிலையில்தான் நாட்டின் பொருளாதாரம் பெரும் குழப்பமாக உள்ளது.

    நிதியமைச்சர் ஜேட்லி

    நிதியமைச்சர் ஜேட்லி

    தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அடிப்படையில் ஒரு சட்ட நிபுணர். மோடி அமைச்சரவையில் பல்வேறு பஞ்சாயத்துக்களைத் தீர்த்து வைக்கும் முக்கிய நபராகவும் விளங்குகிறார். ஜிஎஸ்டி உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் அருண் ஜேட்லி தீவிரமாக செயல்பட்டுள்ளார்.

    நல்லா பேசுவாரு

    நல்லா பேசுவாரு

    அருண் ஜேட்லி நல்ல பேச்சாளரும் கூட. நாடாளுமன்ற விவாதங்களில் எதிர்க்கட்சியினரின் சரமாரி கேள்விகளுக்கு கூலாக பதிலளிக்கக் கூடியவர். ஆனால் ஒரு நிதியமைச்சராக மக்களிடையே பெரும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளார்.

    உடல் நலக் கோளாறு

    உடல் நலக் கோளாறு

    அருண் ஜேட்லிக்கு உடல் நலம் சரியில்லை. மோடி அரசின் கடைசி பட்ஜெட்டைக் கூட இவரால் தாக்கல் செய்ய முடியவில்லை. அப்போது அமெரிக்காவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும் செய்துள்ளார். எனவே இவர் மீண்டும் நிதியமைச்சராகும் வாய்ப்பு இல்லை.

    கோயல்

    கோயல்

    அடுத்த நிதியமைச்சராக வரக் கூடிய வாய்ப்பு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் ஜேட்லி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது 2 முறை இடைக்கால நிதியமைச்சராக இருந்துள்ளார். இடைக்கால பட்ஜெட்டையும் கூட இவர்தான் தாக்கல் செய்தார். பியூஷ் கோயல் ஒரு பொருளாதார நிபுணரும் கூட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பாங்க் ஆப் பரோடாவின் இயக்குநர் குழுவில் இருந்துள்ளார்.

    வரியைக் குறைக்க ஆதரவு

    வரியைக் குறைக்க ஆதரவு

    அடிப்படையில் ஆடிட்டரான பியூஷ் கோயல், மீண்டும் பாஜக ஆட்சியில் அமர்ந்தால் பெருமளவில் வரிகள் குறைக்கப்படும் என்று கூறியுள்ளார். குறிப்பாக மாத ஊதியதாரர்களுக்கு வரிகளை பெருமளவில் குறைக்க இவர் ஆதரவாக உள்ளார். பியூஷ் கோயல் வசம் நிதித்துறை ஒப்படைக்கப்படுமானால் நிச்சயம் பெரும் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.

    யார் நிதியமைச்சராக வந்தாலும் பணி என்னவோ கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    English summary
    Railway Minister Piyush Goyal is tipped to be the next Finance minister if NDA govt is reelected.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X