டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்? தலைமை பதவிக்கு அடிபோடும் முக்கிய நபர்கள்.. பரபர லிஸ்ட்!

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு நிறைய பேர் போட்டிபோடுவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Congress new leader | காங்கிரசை தூக்கி நிறுத்த அதிரடி திட்டம் ! வருகிறது புது பதவி- வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நிறைய பேர் போட்டிபோடுவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் விரைவில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

    காங்கிரஸ் தொடங்கியதில் இருந்து இதுவரை சந்தித்த தேர்தல்களில், இந்த லோக்சபா தேர்தல்தான் மிக மிக மோசமான தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களை மட்டுமே நாடு முழுக்க வென்றுள்ளது.

    அதிலும் காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களை கேரளாவிலும், தமிழகத்தில் 9 இடங்களையும் வென்றுள்ளது. வடமாநிலங்களில் மிக மோசமாக காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது.

    ஸ்டாலினுக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங். வாழ்த்து! இலங்கைக்கு வர அழைப்பு!! ஸ்டாலினுக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங். வாழ்த்து! இலங்கைக்கு வர அழைப்பு!!

    பதவி விலகல்

    பதவி விலகல்

    இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வந்தது. இதற்காக நடந்து முடிந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆனால் இந்த கடிதம் ஒருமனதாக எல்லோராலும் நிராகரிக்கப்பட்டது.

    ஆனால் பிடிவாதம்

    ஆனால் பிடிவாதம்

    ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய பிடிவாதமாக இருப்பதாக செய்திகள் வருகிறது. இது தொடர்பாக குலாம் நபி ஆசாத், கேசி வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களிடம் அவர் பேசினார் என்று கூறுகிறார்கள். கண்டிப்பாக தலைவர் பதவி வேண்டாம் என்று ராகுல் கூறிவிட்டதாக செய்திகள் வருகிறது.

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பதிலாக புதிய தலைவரை நியமிக்க காங்கிரஸ் கட்சி தேடி வருகிறது. அதே சமயம் தலைவர் பதவியில் இருந்து ராகுலை நீக்காமல், புதிதாக செயல் தலைவர் என்ற பதவியை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முடிவெடுத்து இருக்கிறது. தலைவருக்கு உள்ள அனைத்து சக்தியும் இவருக்கும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு இந்த வாரம் நடக்க உள்ளது.

    யார் எல்லாம்

    யார் எல்லாம்

    இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் இந்த புதிய தலைவர் பதவிக்கு நிறைய பேர் போட்டிபோடுவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதற்கான பெரிய லிஸ்ட் ஒன்றும் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் பலர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக தெரிகிறது . காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கேசி வேணுகோபால், மல்லிகார்ஜுனா கார்கே, அஹமது பட்டேல், ப. சிதம்பரம், மன்மோகன் சிங், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தலைவர் பதவிக்கு வர தகுதியானார்கள் என்று கூறப்படுகிறது.

    என்ன வாய்ப்பு

    என்ன வாய்ப்பு

    காங்கிரஸ் கட்சி இப்போது இரண்டு திட்டங்களை மட்டுமே வைத்து இருக்கிறது. அதன்படி முடிந்தளவு ராகுல் காந்தியை தலைவர் பதவியில் தொடர வைக்க காங்கிரஸ் முயற்சி செய்யும். அது நடக்கவில்லை என்றால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய வலுவான தலைவரை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்ய முயலலாம் என்கிறார்கள்.

    English summary
    Who will be the successor of Rahul Gandhi's chief post in Congress?- Here is the list
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X