டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. 143 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு- லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் கணிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: பீகாரில் பாஜக கூட்டணிக்கு 133-143 இடங்கள் கிடைக்கும் என்று சிஎஸ்டிஎஸ்- லோக்நிதி கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபை தொகுதிக்கு, 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தேர்தலில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய சிஎஸ்டிஎஸ்- லோக்நிதி கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அந்த கருத்துக் கணிப்பு முடிவு இன்று இரவு வெளியானது.

Who will win Bihar? Lokniti-CSDS opinion poll result

இதன்படி, எதிர்க்கட்சி கூட்டணியான ராஷ்டிரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி 88-98 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளது.

பீகாரில் பெரும்பான்மைக்கு தேவை மொத்தம் 122 இடங்கள் என்பதால், எதிர்க்கட்சி கூட்டணியால் ஆட்சியை பிடிக்க முடியாது என்கிறது இந்த கருத்துக் கணிப்பு.

பீகார்: நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை- ஆட்சிக்கு 43% பேர் எதிர்ப்பு.. சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி சர்வேபீகார்: நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை- ஆட்சிக்கு 43% பேர் எதிர்ப்பு.. சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி சர்வே

அதே நேரம், ஐக்கிய ஜனதாதளம்-பாஜக ஆளும் கூட்டணிக்கு, 133-143 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்து போட்டியிடும், எல்ஜேபி கட்சிக்கு 2 முதல் 6 இடங்கள் கிடைக்கலாம் என்கிறது இந்த கருத்துக் கணிப்பு.

பிறர் 6 முதல் 10 தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு உள்ளது.

English summary
Who will win Bihar? here is Lokniti-CSDS opinion poll to understand the pulse of the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X