டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாரிடம் எத்தனை போர் விமானங்கள்.. படை வீரர்கள் எண்ணிக்கை எப்படி? இந்தியா-சீனா ராணுவ பலம்- முழு விவரம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சனை கடந்த சில வாரங்களில் மிகப்பெரிதாகி வருகிறது. காஷ்மீரின் லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    India vs China Super power comparison

    இந்தியா சீனா இடையிலான எப்போதுமே ஒரு பனிப்போர் நிலவிதான் வருகிறது. 1962 இல் ஒரு சிறு யுத்தத்தை இந்தியாவும், சீனாவும் நடத்தின.

    அதேநேரம், அதன்பிறகு ஒரு துப்பாக்கி குண்டும், இரு தரப்பிலிருந்தும், புறப்பட்டது கிடையாது. ஆனால் பகைமை தொடர்ந்தது. எனவேதான் இதை பனிப்போர் என்று அழைக்கிறார்கள்.

    இந்தியா-சீனா இடையே தொடரும் உரசல்.. 6ம் தேதி உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை.. பலத்த எதிர்பார்ப்பு இந்தியா-சீனா இடையே தொடரும் உரசல்.. 6ம் தேதி உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை.. பலத்த எதிர்பார்ப்பு

    இந்தியா-சீனா மோதல் வரலாறு

    இந்தியா-சீனா மோதல் வரலாறு

    அதேநேரம், இந்தியா-பூடான்-சீனா எல்லையில், டோக்லாம் என்ற பகுதியில், இப்போது லடாக்கில் ஏற்பட்டதை போன்ற நேரடி பூசல் 2017ல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அந்த பிரச்சினை நீடித்தது. பின்னர் பரஸ்பரம் சரியானது. என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவே இருந்து வருகிறது. எப்போதெல்லாம் எல்லை பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் ராணுவ பலம் விவாதிக்கப்படுவது வழக்கம்.

    இந்தியாவின் ராணுவ பலம்

    இந்தியாவின் ராணுவ பலம்

    ஜப்பான் பாதுகாப்புத்துறை 2019ம் ஆண்டு வெளியிட்ட ஒரு அறிக்கையில், சீனாவிடம் 9,80,000 ராணுவ வீரர்கள் உள்ளார்கள். இந்தியாவிடம் 14,00000 ராணுவ வீரர்கள் உள்ளார்கள். அதாவது, சீனாவைவிடவும், நம்மிடம் சுமார் 4 லட்சம் ராணுவ வீரர்கள் அதிகம் உள்ளனர். தரைப்படை வீரர்களின் எண்ணிக்கை அடிப்படையில், இந்தியா மிகவும் பலம் வாய்ந்த நாடாக உள்ளது. உலகிலேயே அதிக ராணுவ வீரர்களை கொண்ட டாப் 1 நாடாகவும் இந்தியா உள்ளது.

    ராணுவ பலத்தில் சீனாவுக்கு 3வது இடம்

    ராணுவ பலத்தில் சீனாவுக்கு 3வது இடம்

    இந்த பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ள நாடு எது என்று கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். கிம் ஜாங் உன் ஆட்சி செய்யும் வட கொரியாதான் அது. ராணுவ வீரர்கள் எண்ணிக்கையில், சீனாவுக்கு உலக அளவில் 3வது இடம்தான். 1927ம் ஆண்டு சீன ராணுவம் துவங்கப்பட்டது. முன்பு, அதில் 20 லட்சத்திற்கும் அதிகமான வீரர்கள் இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ராணுவ வீரர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது சீனா.

    தொழில்நுட்ப பலம்

    தொழில்நுட்ப பலம்

    அதேநேரம், சீனா,தனது வான் படை மற்றும் கப்பற்படைகளின் பலத்தை அதிகரித்துள்ளது. தொழில்நுட்பத்தை அதிக அளவில் புகுத்த தொடங்கியுள்ளது. ராணுவத்திற்காக 2019ம் ஆண்டு சீனா 177 பில்லியன் டாலர்களை ஒதுக்கிய நிலையில், இந்தியா சுமார் 61 பில்லியன் டாலர்களை ராணுவத்திற்காக ஒதுக்கியது. படை எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், நம்மை விட சீனா மூன்று மடங்கு அதிகம் ராணுவத்திற்காக செலவிடுகிறது.

    இந்தியா, சீனா போர் விமானங்கள் எண்ணிக்கை

    இந்தியா, சீனா போர் விமானங்கள் எண்ணிக்கை

    சீனாவிடம் 3187 போர் விமானங்கள் உள்ளன. இந்தியாவிடம் 2082 விமானங்கள் இருக்கிறது. சீனாவிடம் 714 போர்க் கப்பல்கள், 76 நீர் மூழ்கி கப்பல்கள் இருக்கின்றன. இந்தியாவிடம் 295 போர்க் கப்பல்கள்,16 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன என்று தெரிவிக்கிறது ஒரு முன்னணி, பாதுகாப்பு துறை சார்ந்த இணையதளம்.

    விமான நிலையங்கள்

    விமான நிலையங்கள்

    இந்திய-சீன எல்லைப்பகுதிகளில் 15 முக்கிய விமான தளங்களையும், 27 சிறிய விமான நிலையங்களையும் சீனா உருவாக்கியுள்ளது. கட்டியுள்ளது. , அனைத்து வானிலையின் போதும் விமானங்கள் செல்லவும் தரையிறங்கவும் வகையிலாக திபெத் பகுதியில் சீனா அமைத்துள்ள விமான தளம் முக்கியமான ஒன்றாகும். போர் ஜெட் விமானங்களும் இங்கு தரையிறங்க முடியும். இந்தியா, சீன எல்லைப்பகுதியில் 31 விமான தளங்களை உருவாக்கியுள்ளது. அசாமிலுள்ள விமான தளங்கள் இதில் முக்கியமானவை.

    சீன எல்லையில் இந்தியா உஷார்

    சீன எல்லையில் இந்தியா உஷார்

    சீன எல்லை விஷயத்தில் வெகு காலமாக இந்தியா கவனம் செலுத்தவில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து, சீன எல்லையில், பாதுகாப்பை பலப்படுத்தும் வேலையை இந்தியா ஆரம்பித்துள்ளது. இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் 73 சாலைகளை அமைக்கும் திட்டத்தை கையிலெடுத்தது இந்தியா. அதில் 30 சாலைத் திட்டங்களை துரிதமாக போட்டு முடித்துள்ளது. அதில் மானசரோவர் பாதையில் அமைக்கப்பட்ட பாதையால்தான் சீனா மேலும் கடுப்பாகியுள்ளது. இந்தியாவின் இந்த வியூகம் சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.

    English summary
    With approximately 1.4 million personnel, the Indian Army has become the world’s largest ground force, pulling ahead of China, here is the army comparison.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X