டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை?

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்திற்கு மட்டுமில்லாமல் அவரின் குடும்பத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    உச்சகட்ட பரபரப்பில் டெல்லி... ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி

    டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்திற்கு மட்டுமில்லாமல் அவரின் குடும்பத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மீது சிபிஐ இன்று நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்கள் டெல்லி ஹைகோர்ட்டில் ஏற்கப்படவில்லை.

    இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் கூட இன்று விசாரிக்கப்படவில்லை. இந்த மனுக்கள் நாளைத்தான் விசாரிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

    என்ன சிக்கல்

    என்ன சிக்கல்

    ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது மும்பையை சேர்ந்த நிறுவனம். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்துள்ளது.இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    கார்த்தி சிதம்பரம்

    கார்த்தி சிதம்பரம்

    இதில் முதலில் சிக்கியது கார்த்தி சிதம்பரம்தான். இதில் கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் பல முறை விசாரிக்கப்பட்டார். அதேபோல் கடந்த வருடம் இவர் இதில் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர்.

    இப்போது என்ன

    இப்போது என்ன

    இந்த நிலையில்தான் தற்போது ப. சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சிதம்பரம் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்பட்டு காவலில் எடுத்து விசாரிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    வேறு என்ன

    வேறு என்ன

    இது இல்லாமல் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி மற்றும் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் ஆகியோரும் இதில் விசாரிக்கப்பட வாய்ப்புள்ளது. இவர்களின் வங்கி கணக்கிற்கு முறைகேடாக ஐஎன்எக்ஸ் நிறுவனம் சார்பாக பணம் அனுப்பப்பட்டுள்ளது என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

    என்ன வாய்ப்பு

    என்ன வாய்ப்பு

    இதனால் இவர்கள் நான்கு பேரையும் இன்று மாலையே மொத்தமாக காவலில் எடுத்து விசாரிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அல்லது கார்த்தி சிதம்பரம், ப. சிதம்பரம் இருவரை மட்டும் கைது செய்துவிட்டு, ஸ்ரீநிதி, நளினி சிதம்பரம் இருவரையும் வீட்டில் வைத்தே விசாரிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    English summary
    Whole P.Chidambaram family may get into trouble in INX Media Case today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X