டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த வழக்குக்கு 98 நாட்கள் திகார் சிறையா.. ப.சிதம்பரத்தை சந்தித்த சசிதரூர் கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்தை சந்தித்து பேசினார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

Why 98 days judicial custody for P. Chidambaram, asks Shashi Tharoor

அவரை 27-ஆம் தேதி வரை திகார் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசிதரூர் திகார் சிறைக்கு சென்று ப சிதம்பரத்தை சந்தித்து பேசினார்.

அவருடன் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி ஆகியோர் உடனிருந்தனர். ப சிதம்பரத்துடனான சந்திப்புக்கு பின்னர் சசி தரூர் செய்தியாளர்களை சந்தித்தார்.

15 மூட்டைகளில் வெடிகுண்டுகளை எடுங்கள், மக்கள் மீது வீசி கொல்லுங்கள்.. உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி15 மூட்டைகளில் வெடிகுண்டுகளை எடுங்கள், மக்கள் மீது வீசி கொல்லுங்கள்.. உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

அப்போது அவர் கூறுகையில் 98 நாட்கள் ப சிதம்பரத்துக்கு சிறை வாசம் எதற்கு? இந்த வழக்கு ஒன்றும் சர்ச்சைக்குரிய பிரச்சினை அல்ல. அரசியலமைப்பின் அடிப்படை கடமை மீறப்படுகிறது. அவருடன் நாங்கள் இருக்கிறோம். ஒற்றுமையை காட்டவே நாங்கள் வந்தோம் என்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மூத்த தலைவர்களும் சந்தித்தனர்.

English summary
Why 98 days judicial custody for P. Chidambaram, asks Shashi Tharoor who meets P.C. in Tihar prison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X