டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிஏஏ, விவசாயிகள் போராட்டம், லவ் ஜிகாத்.. கூப்பிட்டு விசாரித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!

Google Oneindia Tamil News

டெல்லி : 2 நாள்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன். டெல்லியில் சிவில் சமுதாய பிரதிநிதிகளை சந்தித்து, மத விவகாரம், பத்திரிகை சுதந்திரம், விவசாயிகள் போராட்டம், லவ் ஜிஹாத் வன்முறை , சிறுபான்மை உரிமைகள், இஸ்ரேல் உளவு மென்பொருள் பெகாசஸ் ஆகியவை குறித்து விவாதித்தார் என்று சொல்லப்படுகிறது.

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆண்டனி பிளிங்கன். இந்தியா-அமெரிக்க உறவு என்பது உலகின் 'மிக முக்கியமான' ஒன்றாகும், இருநாட்டு மக்களும் 'பகிர்ந்து கொண்ட பாசத்தால் இணைக்கப்பட்டுள்ளனர்' என்று கூறினார்.

2 நாள்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் செவ்வாய் கிழமை இந்தியா வருகை தந்தார். அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக ஆண்டனி பிளங்கன் பதவி ஏற்ற பின்னர், அவர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

அஜித் தோவல்-அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு.. முக்கிய விவகாரம் குறித்து பேச்சு.. முழு விவரம்!அஜித் தோவல்-அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு.. முக்கிய விவகாரம் குறித்து பேச்சு.. முழு விவரம்!

இரு தரப்பு உறவு

இரு தரப்பு உறவு

அமெரிக்க வெளியுறவுத்துறை அமச்சர் ஆண்டனி பிளிங்கன் இன்று காலை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்டுகிறது.

இந்தியா கவலை

இந்தியா கவலை

இதனிடையே மத விவகாரம், பத்திரிகை சுதந்திரம், விவசாயிகள் போராட்டம், லவ் ஜிஹாத் வன்முறை மற்றும் சிறுபான்மை உரிமைகள் ஆகியவை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் இன்று டெல்லியில் சிவில் சமுதாய பிரதிநிதிகளை சந்தித்தார் . அதன் ஒரு பகுதியாகவே தலாய் லாமாவின் பிரதிநிதிகள் குழுவை சந்தித்தார்.இந்த சந்திப்பை சீனா கடுமையாக எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசும் கவலையை வெளிப்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

என்ன பேசினார்கள்

என்ன பேசினார்கள்

தலாய்லாமா குழு உடனான சந்திப்பின் போது திபெத் விவகாரம் நேரடியாக எழுப்பப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் இந்த விவகாரத்தில் சீனாவின் போக்கு குறித்து விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. புதன்கிழமை காலை டெல்லியில் உள்ள தலாய் லாமாவின் பணியகத்தின் இயக்குநரை ஆண்டனி பிளிங்கன் சந்தித்ததை அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

 நெகிழ்ந்து போன பிளிங்கன்

நெகிழ்ந்து போன பிளிங்கன்

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் டெல்லியில் இன்று பேசும் போது, அமெரிக்காவின் கேபிடல் மாளிகை மீது கடந்த ஜனவரி 6 ஆம் தேதி டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்கா விசாரணை நடத்தி வருவது பற்றி பேசினார். அப்போது இது போன்ற சம்பவங்கள் உலகின் அனைத்து ஜனநாயக நாடுகளுக்கும் மிகப்பெரிய சவால் ஆகும். குறிப்பாக இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு சவால் என்று பேசினார். மேலும் பிளிங்கன் கூறும் போது, இந்தியா-அமெரிக்க உறவு என்பது உலகின் "மிக முக்கியமான" ஒன்றாகும். இரு நாடுகளின் மக்களால் "பகிரப்பட்ட பண்பான குண நலன்களால் இணைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

சட்டத்தின் ஆட்சி

சட்டத்தின் ஆட்சி

மேலும் பிளிங்கன் கூறும் போது, இந்தியாவும் அமெரிக்காவும் வலிமையான ஜனநாயகத்தை கொண்டுள்ளன. இந்திய மக்களும் அமெரிக்க மக்களும் மனித நேயம் மற்றும் வாய்ப்பின் சமத்துவம், சட்டத்தின் ஆட்சி, மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கை உள்ளிட்ட அடிப்படை சுதந்திரங்களை நம்புகிறார்கள், இந்த சுதந்திரம் தான் எங்கள் இரு நாடுகளின் அடிப்படை கொள்கைகள் என்றார். நண்பர்களை போல் பேசி பிரச்சனைகளை தீர்க்கும் முன்னேறிய ஜனநாயக நாடுகள் என்றும் புகழ்ந்தார். அனைத்து தரப்பு மக்களும் அரசு தொடர்பாக குரல் கொடுக்க தகுதியுடையவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம், அவர்கள் யாராக இருந்தாலும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் பிளிங்கன் கூறினார்.

விவாதித்தார்

விவாதித்தார்

இதனிடையே மத விவகாரம், பத்திரிகை சுதந்திரம், விவசாயிகள் போராட்டம், லவ் ஜிஹாத் வன்முறை மற்றும் சிறுபான்மை உரிமைகள் ஆகியவை குறித்து பல்வேறு முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பிளிங்கன் பேசினார். வழக்கறிஞர் மேனகா குருசாமி, நம்பிக்கை அறக்கட்டளை நிறுவனர் குவாஜா இப்திகர் அகமது மற்றும் ராமகிருஷ்ணா மிஷனின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கியமான சிலரை பிளிங்கன் சந்தித்தார்.

என்ன பேசினார்கள்

என்ன பேசினார்கள்

சுமார் 45 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் போது, மோடி அரசு நிறைவேற்றிய குடியுரிமை (திருத்தம்) சட்டம் (சிஏஏ) மற்றும் நிறைவேற்றப்பட்ட மாற்ற-எதிர்ப்பு (காதல்-ஜிகாத்) சட்டங்கள், சர்வதேச விமர்சனங்களை ஈர்த்த சில மாநிலங்கள். இஸ்ரேலிய உளவு மென்பொருளான பெகாசஸ் பயன்படுத்தி கண்காணிப்பில் இருப்பதாக நம்பப்படும் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பட்டியல் உள்பட பிற பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட விவசாய சீர்திருத்த சட்டங்கள் தொடர்பாக டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராடுவது குறித்தும் பேசியதாக சொல்லப்படுகிறது.

English summary
why Antony Blinken discusses CAA, love jihad and farmers protests with civil society representatives. what he talks with Ajit Doval, S. Jaishankar. reed the article.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X