டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒவ்வொரு மாநிலமாக அழிந்து வரும் காங்கிரஸ், கருத்து வேறுபாடுகளை கண்டு கொள்ளாததால் பேரழிவு

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரசில் இருந்து வரிசையாக வெளியேறும் தலைவர்கள்- வீடியோ

    டெல்லி: சுதந்திரத்துக்காக போராடிய காங்கிரஸ் கட்சி தற்போது ஒவ்வொரு மாநிலமாக அழிந்து வருகிறது. கட்சிக்குள்வலுவான மாநில தலைமையை உருவாக்க டெல்லி மேலிடம் உருவாக்க விரும்பாத காரணத்தாலும், காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதல்கள் மற்றும் கருத்துவேறுபாடுகளை மேலிட தலைவர்கள் கண்டு கொள்ளாததாலும் இப்போது பேரழிவை சந்தித்து கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி

    இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு இருந்த பெரிய கட்சி என்றால் காங்கிரஸ் கட்சி தான். சுதந்திரத்துக்கு பின் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி பொறுப்பை ஏற்ற காங்கிரஸ் கட்சி.. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு போட்டிய இடதுசாரிகள் இருந்தனர். அதன்பின்னர் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் மெல்ல மெல்ல ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியை பறிகொடுத்தது.

    1957ம் ஆண்டு கேரளாவில் இடதுசாரிகளிடம் ஆட்சியை பறிகொடுத்தது. எனினும் அங்கு வலுவான கட்சியாக இன்றும் நிலைத்து இருக்கிறது. அதற்கு காரணம் அங்கிருந்த வலுவான மாநில தலைமை. இதனால் ஒருமுறை விட்டாலும் மறுமுறை காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கிறது.

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு.. விண்ணப்பிக்க போறவங்களுக்கு புதுமையாக அலார்ட் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு.. விண்ணப்பிக்க போறவங்களுக்கு புதுமையாக அலார்ட்

    தலைவர்கள் அதிகரிப்பு

    தலைவர்கள் அதிகரிப்பு

    ஆனால் பக்கத்து மாநிலமாக தமிழகத்தில் 1967ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு பிரச்னையால் ஆட்சியை பறிகொடுத்தது காங்கிரஸ் கட்சி. அதன்பிறகு மெல்ல மெல்ல கரைய தொடங்கியது. இதற்கு காரணம் மாநிலத்தில் வலுவான தலைமையை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் விட்டது. காமராஜர் போன்ற தலைவர்களே இந்திராவுக்கு எதிராக கருத்து வேறுபாடுகளால் பிரிந்து சென்றனர். அதன்பின்னர் காங்கிரஸ் கட்சி திமுக அல்லது அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்து தன் கட்சியை வளர்க்காமல் விட்டுவிட்டது. தமிழக காங்கிரஸ் கட்சியில் இருக்கும் கோஷ்டிகள் மிகப்பெரியதாகும். இதுவே காங்கிரஸ் வளர்ச்சிக்கு பெரிய தடையாகும். இங்கு தலைவர்கள் வளர்ந்தார்கள், தொண்டர்கள் குறைந்தார்கள் என்பதே உண்மை.

    பல மாநிலங்கள்

    பல மாநிலங்கள்

    மேற்கு வங்கத்தில் 1977ல் இடதுசாரிகளிடம் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ் அதன்பிறகு எழுந்திருக்கவே முடியவில்லை. இதேபோல் தான் உத்தரபிரதேசம், பீகார், அஸ்ஸாம், திரிபுரா, ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா என இந்த பட்டியல் நீண்டதாக செல்கிறது.

    திரிபுராவில் காலி

    திரிபுராவில் காலி

    ஒருங்கிணைந்த ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி மிக வலுவாக இருந்தது. ஆனால் இரண்டு மாநிலங்களாக பிரித்ததன் காரணமாக ஆந்திரா தெலுங்கானா இரண்டு மாநிலங்களிலுமே தற்போது காங்கிரஸ் முற்றிலும் அழியும் நிலைக்கு சென்றுவிட்டது. இதேபோல் தான் திரிபுரா மாநிலத்திலும் அண்மையில் நடந்தது.அங்கு வலுவான தலைமை இல்லாத காரணத்தால் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியினர் மொத்தமாக விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் அங்கு முதல்முறையாக பாஜக ஆட்சியை பிடித்தது.

    உ.பியில் வாய்ப்பே இல்லை

    உ.பியில் வாய்ப்பே இல்லை

    மகாராஷ்டிராவில் சரத்பவார் வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்ததால் அங்கு பாஜகவும் சிவனோவும் அசுர வளர்ச்சி அடைந்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு காலத்திலும் சிவசேனா மற்றும் காங்கிரஸ் தான் போட்டியில் இருந்தன. இப்போது பாஜக இந்த கட்சிகளை தூக்கி சாப்பிட்டு முன்ணுக்கு வந்துவிட்டது. குஜராத்தில் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் இனி வாய்ப்பே இல்லை என்ற அளவுக்கு தோல்வி அடைந்துவிட்டது. டெல்லியில் தடம் தெரியாத அளவுக்கு காணாமல் போய்விட்டது.

    உயிர்ப்புடன் இருக்க

    உயிர்ப்புடன் இருக்க

    இப்போது காங்கிரஸ் உயிர்போடு இருப்பது பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,கேரளா, கர்நாடகா, சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், கோவா, இமாச்சல பிரதேசம் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவைதான். இங்கெல்லாம் உயிர்ப்புடன் இருக்க வலுவான தலைமை காரணமாகும். மற்ற மாநிலங்களில் வலுவான தலைமை இல்லாததால் அதிகாரத்தை இழந்துவிட்டதோடு, காங்கிரஸ் கட்சி தனது எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துவிட்டது. இதன்காரணமாகவே காங்கிரஸ் கடந்த லோக்சபா தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. மாநில வாரியாக வலுவான தலைமை, முடிவுகளை எடுப்பதில் சுதந்திரம், கோஷ்டி பூசலை களைவது, உள்ளிட்டவைகள் இல்லாமல் காங்கிரஸ் வளர்வது சாத்தியம் இல்லை.

    English summary
    why congress party loss every state after every election? main reason Disagreement, lack of strong leadership
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X