டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ் மரபணு மாற்றம்...தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு தடையாக...இருக்கிறதா?

Google Oneindia Tamil News

டெல்லி: நடப்பாண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி அறிவிப்பை எதாவது ஒரு நாடு வெளியிடலாம் என்ற நம்பிக்கை பிறந்து இருக்கிறது என்றாலும், தடுப்பு ஊசி பரிசோதனை முழுவதும் வெற்றி பெற்று இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டியது இருக்கிறது. இதற்குக் காரணம் அடிக்கடி கொரோனா வைரஸ் தனது மரபணுவை அல்லது உருவத்தை மாற்றிக் கொண்டு இருப்பதுதான்.

SARS-CoV-2 என்று பெயரிடப்பட்டு இருக்கும் நாவல் கொரோனா வைரஸ் மனிதருக்கு மனிதர் பரவும்போது தனது மரபணுவை மாற்றிக் கொள்கிறது. இத்துடன் மெதுவாக இந்த மாற்றம் ஏற்பட்டு வருவதும் கொரோன தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிப்பதற்கு இடையூறாக இருப்பதாக தொற்று நோய் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Why coronavirus poses challenge to Covid-19 vaccine development

நோய் எதிர்ப்பு குறைபாடு வைரஸ்தான் இந்த மரபணு மாற்றத்திற்கு காரணமாக இருக்கும் என்று தொற்று நோய் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஹெச்ஐவிக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் கடந்த நாற்பது ஆண்டுகளாக தோல்வியை சந்தித்து வரும் நிலையில், கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.

RNA-genomes கொண்ட வைரஸ்கள் எளிதில் மரபணு மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த வைரஸ்தான் கொரோனா, ஹெச்ஐவி, இன்புளூயன்சா ஆகியவற்றுக்கு காரணமாக உள்ளது. கொரோனா வைரஸில் உள்ள புரதச்சத்து மரபணு மாற்றத்தை மெதுவாக மாற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

விஞ்ஞானிகள் 95,000 மரபணு மாற்றங்களை கண்டறிந்துள்ளனர். இதன்மூலம் 12,000 முறை கொரோனா வைரஸில் மரபணு மாற்றங்கள் நிகழ்ந்து இருப்பதையும் தொற்று நோய் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். கொரோனா வைரஸின் மேல் பகுதியில் முள் போன்ற தோற்றத்தில் இருக்கும் புரதச்சத்துதான் மனிதரில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக அமைகிறது.

இந்த மரபணு மாற்றத்தை D614G என்று பெயரிட்டுள்ளனர். இந்த மரபணு மாற்றம்தான் அதிகளவில் உருமாற்றத்தை அளிக்கிறது. இந்த உருமாற்றம்தான் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் இருந்து தவறுகிறது.

இந்தியா கொரோனா பாதிப்பு ஒரே நாளில் ஒரு லட்சத்தை நெருங்கியது - 1172 பேர் மரணம் இந்தியா கொரோனா பாதிப்பு ஒரே நாளில் ஒரு லட்சத்தை நெருங்கியது - 1172 பேர் மரணம்

உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்குள் நுழையும் வேற்று ரக வைரஸ் மற்றும் பாக்டீரியா ஆகியவற்றை கொல்லும். அல்லது எதிர்த்து போரிடும். அல்லது சமன்படுத்தும். கொரோனா ஒருமுறை ஏற்பட்டு இருந்தால் மீண்டும் ஏற்படாது என்று கூறப்பட்டது. இதற்குக் காரணம் உடலில் அதற்கான நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு விடும் என்பதுதான். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அல்லது உருமாற்றம் அடைவதால், மீண்டும் வந்தவர்களுக்கே வருகிறது என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த ஆய்வும் நடந்து வருகிறது.

ஆனால், முதலில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் உருமாற்றத்தில் இருந்து, புதிய வைரஸ் உருமாற்றத்தால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பது கடினம். இதுதான் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக இருந்து வருகிறது.

English summary
Why coronavirus poses challenge to Covid-19 vaccine development
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X