இரவோடு இரவாக டெல்லி போன ஆளுநர் ரவி.. அங்கிருந்து திடீரென ரயில் ஏறி.. "ரூட்டை" மாற்றி.. பிளானே வேற!
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லி சென்ற நிலையில் அங்கு தலைவர்கள் யாரையும் சந்திக்காமல் தவிர்த்து இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி நேற்று இரவு டெல்லி சென்றார். இரவு 8.45 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார்.
நடுஇரவில் டெல்லியில் இறங்கியவர்.. அங்கு இரவு ஓய்வு.எடுத்தார். அவரின் டெல்லி பயணத்திற்கு பின் வேறு சில முக்கிய காரணங்கள் இருப்பதாக ஆளுநர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நான் சாவர்க்கர் இல்ல.. என் பேரு ராகுல்! பாஜகவை கதறவிட்ட காங்கிரஸ்! தலைநகரில் கலக்கிய போஸ்டர்கள்..!

என்ன காரணம்
குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி முடியும் நிலையில், இந்த வருடம் ஜூலை மாதம் 18ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில்தான் ஆளுநர் ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். இதனால் அவர் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஏதேனும் ஆலோசிக்க உள்ளாரா என்ற கேள்வி எழுந்தது. இதை பற்றி அவர் ஆலோசனை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

பெயர் அடிபட்டது
ஏனென்றால் ஆர். என் ரவி பெயரும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் லிஸ்டில் அடிபட்டது குறிப்பிடத்தக்கது. இது பற்றி பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக சில அரசியல் தரப்பு வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்தன. அவரின் டெல்லி பயணம் நாளையோடு முடிகிறது. நாளை இரவு அவர் மீண்டும் சென்னை திரும்புவார். அதற்கு முன் இந்த சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நடந்தது என்ன?
ஆனால் இந்த யுகங்களை பொய்யாக்கி.. ஆளுநர் ரவி தனது ரூட்டை மாற்றி உள்ளார். ஆர்.என் ரவி டெல்லி சென்ற நிலையில் அங்கு தலைவர்கள் யாரையும் சந்திக்காமல் தவிர்த்து இருப்பதாக கூறப்படுகிறது. அவர் இன்று காலை ரயிலில் டெல்லியில் இருந்து பீகார் செல்கிறார். பீகார் அவரின் சொந்த ஆகும். அவரின் இந்த பயணம் பர்சனல் பயணம் என்கிறார்கள். இது அரசியல் ரீதியான பயணம் கிடையாது.

கோவில்
பீகாரில் இருக்கும் பாட்னா கோவில் ஒன்றில் அவர் வழிபாடு நடத்த உள்ளார். அங்கு இருக்கும் தேவி கோவில் ஒன்றில் இவர் பூஜை செய்ய இருக்கிறாராம். இங்கு அவர் அடிக்கடி செல்வது வழக்கம். தமிழ்நாடு ஆளுநர் ஆன பின் இவர் இங்கே வழிபாடு செய்யவில்லை. இந்த நிலையில் இந்த முறை வழிபாடு நடத்த முடிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளார் என்கிறார்கள். மற்றபடி இவரின் பயணத்திற்கு பின் வேறு அதிகாரபூர்வ காரணங்கள் இல்லை என்றே ஆளுநர் மாளிகை தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.