டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசின் நிதிப் பற்றாக்குறை எவ்வளவு? கடைசிவரை சொல்லாமல் இழுத்தடித்த நிர்மலா சீதாராமன்.. முடிவு சுபம்

Google Oneindia Tamil News

டெல்லி: 2019-20ம் நிதியாண்டிற்கான நிதி பற்றாக்குறை இலக்கை, மத்திய அரசு 3.3 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், நிதி பற்றாக்குறை இலக்கு 3.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அது மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

அரசின் மொத்த செலவீனம் மற்றும், மொத்த வருவாய் ஆகியவற்றுக்கு நடுவேயான வேறுபாடுதான், நிதிப் பற்றாக்குறையாகும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இதுபோன்ற நிதிப் பற்றாக்குறை 3.4 சதவீதமாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில், அப்போதைய நிதியமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்திருந்தார்.

இழுத்தடிப்பு

இழுத்தடிப்பு

எனவே, பொது பட்ஜெட்டில், அநேகமாக நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்றுதான் பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கணித்தனர். மாறாக, நிதிப் பற்றாக்குறை இலக்கை 3.3 சதவீதமாக வைத்திருப்பதாக அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன். பொதுவாக நிதிப் பற்றாக்குறை தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டின் துவக்கத்திலோ, அல்லது பட்ஜெட் உரையின் நடுவிலேயோ சொல்லப்படும். ஆனால், இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெகு நேரமாக அதை சொல்லவேயில்லை.

ஆர்வம் அதிகம்

ஆர்வம் அதிகம்

நிதிப் பற்றாக்குறை எவ்வளவு என அறிவதில் பொருளாதார வல்லுநர்கள், ஆய்வாளர்கள் உட்பட பல தரப்பினரும் ஆர்வத்தோடு இருந்தனர். ஆனால், ஒரு வழியாக கடைசியாகவே அதை தெரிவித்தார் நிர்மலா சீதாராமன்.

ஆர்வம் அதிகம்

ஆர்வம் அதிகம்

நிதிப் பற்றாக்குறை எவ்வளவு என அறிவதில் பொருளாதார வல்லுநர்கள், ஆய்வாளர்கள் உட்பட பல தரப்பினரும் ஆர்வத்தோடு இருந்தனர். ஆனால், ஒரு வழியாக கடைசியாகவே அதை தெரிவித்தார் நிர்மலா சீதாராமன்.

பெருமைதானே

பெருமைதானே

ஒருவகையில், அரசு நிதி நிலைமையை சரியாக பராமரிக்கிறது என்ற வெளிப்பாடுதான், நிதிப் பற்றாக்குறை இலக்கு குறைக்கப்பட்டிருப்பது. இது அரசுக்கு பெருமைதானே தவிர, இதில் மூடி மறைக்க ஏதுமில்லை. ஆனாலும், அவர் ஏன் அதை கடைசியாக சொன்னார் என்பது பொருளாதார வல்லுநர்களுக்கே புரியவில்லை. இதில்தான், அனுபவம் முக்கியத்தும் பெறுகிறது என்கிறார்கள், அரசியல் வட்டாரத்தில். நிர்மலா சீதாராமனுக்கு இது முதல் பட்ஜெட். எனவே, இந்த தடுமாற்றம் இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள் அவர்கள்.

அடுத்து என்ன

அடுத்து என்ன

எது எப்படியோ, எப்போது சொன்னாரோ.. ஆனால், இறுதியில், நிதிப் பற்றாக்குறை இலக்கு குறைக்கப்பட்டுள்ளது என்னவோ, நாட்டுக்கு நல்லதுதான். அந்த இலக்கை எட்டுவதற்கு மத்திய அரசு உறுதியான பாதையில் பயணிக்குமா என்பதே அடுத்த கேள்வி.

English summary
It is normally a practice by Finance Minister's to reveal the fiscal deficit number in the middle or at the very beginning of the Budgetary speech. This number is critical and is watched by economists, analysts, sovereign rating agencies etc. The difference between total revenue and total expenditure of the government is termed as fiscal deficit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X