டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குளிர்காலத்தில் இதய பிரச்சினைகள் அதிகரிப்பது ஏன்? தடுக்க என்ன செய்யனும்? மருத்துவ நிபுணர்கள் அட்வைஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: குளிர்காலங்களில் இதய பிரச்சினைகள் அதிகரிப்பது ஏன் என்பது குறித்தும் இதய நோய்கள் வராமல் தற்காத்துக்கொள்வதற்கு என்ன மாதிரியான லைப் ஸ்டலை பின்பற்ற வேண்டும் என்பது பற்றிய முழு விவரங்களை இங்கே காணலாம்.

குளிர் காலம் வந்து விட்டாலே பலருக்கும் கஷ்டம்தான். உடலை நடு நடுங்க வைக்கும் குளிரால் பலரையும் வாட்டி வதைக்கும்.

குளிகாலங்களில் பல்வேறு நோய்களும் நம்மை தாக்குகின்றன. சளி, தொண்டை வலி, காய்ச்சல் மட்டும் இன்றி மேலும் தீவிர உடல் நல பாதிப்புகளும் குளிர் காலத்தில் பலருக்கு ஏற்படுகிறது.

நீங்கல்லாம் மனுஷங்களாயா? நெஞ்சுவலி என மருத்துவமனைக்கு போன பெண்! மயக்க மருத்தைக் கொடுத்து.. உபி ஷாக்! நீங்கல்லாம் மனுஷங்களாயா? நெஞ்சுவலி என மருத்துவமனைக்கு போன பெண்! மயக்க மருத்தைக் கொடுத்து.. உபி ஷாக்!

 அதிக ஹார்ட் அட்டாக் ஏற்படுவது ஏன்?

அதிக ஹார்ட் அட்டாக் ஏற்படுவது ஏன்?

இன்னும் சொல்லப்போனால், கடுமையான குளிர் இதய செயல்பாட்டிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர். வெப்ப நிலை குறையும் போது இரத்த நாளங்கள் சுருங்குவதால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. குளிர்காலங்களில் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளில் ஏற்படும் சுருக்கம் காரணமாக நெஞ்சு வலி ஏற்படும் அபாயங்கள் அதிகரிக்கின்றன.

இரத்தம் செல்வது அதிகரிக்கும்

இரத்தம் செல்வது அதிகரிக்கும்

குளிர் காலங்களில் ஹார்ட் அட்டாக் அதிகம் ஏற்படுவது எதனால் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், குளிர் காலத்தில் ரத்தத்தை பம்ப் செய்வதற்காக இதயம் அதிகப்படியாக பணி செய்ய வேண்டியிருக்கும். இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நமது ரத்த தமனிகள் குளிர் காலத்தில் குறுகலாகும் என்பதால் நமது உடல் வெப்ப நிலையை சீராக வைத்திருக்க இதயத்திற்கு நெருக்கமாக உள்ள உள்ளுறுப்புகளுக்கு இரத்தம் செல்வது அதிகரிக்கும். இதன் விளைவாக தோல் மற்றும் கை கால்களில் இரத்தம் ஓட்டம் குறையும். குளிர்காலத்தினால் சுருங்கிய இரத்த நாளங்களில் ரத்தம் செல்வதற்காக இதயம் அதிகமாக பணி செய்ய வேண்டியிருக்கும்.

குளிர் காலங்களில் ஏன்?

குளிர் காலங்களில் ஏன்?

இவ்வாறு நடக்கும் போது இரத்தம் உறைவு (clotting) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதுபோக பிளேட்லட்கள் குளிர்காலத்தில் ஒன்றுடன் ஒன்று அடிக்கடி ஒட்டிக்கொள்ளும். குளிர்காலங்களில் காலை நேரங்களில் இதய நோய்கள் மற்றும் ஹார்ட் அட்டாக்கள் ஏற்படுவது அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல், வைட்டமின் டி பற்றாக்குறை இருந்தாலும் இதய பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிமாக இருப்பதாகவும் பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன" என்றனர்.

இதயத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி?

இதயத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி?

இதய நோய்கள் எதுவும் ஏற்படமால் உடல் நலத்தை பேண காய்கறிகள், பழங்கள் அதிக அளவில் உட்கொள்ள வேண்டும் என்பதே மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையாக இருக்கிறது. அதேபோல குறைந்தபட்சம் 30-40 நிமிடம் நடைபயிற்சி போன்ற உடல் இயக்கங்களில் ஈடுபட வேண்டும். தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது, சைக்கிளிங், நீச்சல் அடிப்பது, ஜாக்கிங் செல்வது என உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். நமது இதய ஆரோயக்கத்திற்கும் மிகவும் இன்றியமையாதது என்றும் பரிந்துரைக்கின்றனர். அதேவேளையில் பளு தூக்குதல் போன்ற கடினமான உடற்பயிற்சிகள் இதயத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் அறிவுறுத்துகின்றனர்.

English summary
Here you can find complete details on why heart problems increase in winters and what kind of lifestyle to follow to protect yourself from heart diseases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X