டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரெட் வார்னிங்.. ஆர்பிஐயிடம் ரூ.1.76 லட்சம் கோடி வாங்கும் மத்திய அரசு.. வல்லுனர்கள் கடும் எச்சரிக்கை

மத்திய ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு 1.76 லட்சம் கோடி ரூபாயை பெறுவது மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்பிஐயிடம் ரூ.1.76 லட்சம் கோடி வாங்கும் மத்திய அரசு.. வெளியாகும் பரபரப்பு குற்றச்சாட்டு

    டெல்லி: மத்திய ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு 1.76 லட்சம் கோடி ரூபாயை பெறுவது மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

    நேற்று இரவு மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்தா தாஸ் இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளார்.

    ஒரு வருடமாக ஆர்பிஐ எதிர்த்து வந்ததை தற்போது ஏற்றுக்கொண்டு அரசுக்கு பணம் அளிக்க முடிவு செய்துள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

    மாயமான பணமா? ஆர்பிஐயிடம் மத்திய அரசு ரூ.1.70 லட்சம் கோடி வாங்குவது ஏன்? அதிர வைக்கும் புகார்! மாயமான பணமா? ஆர்பிஐயிடம் மத்திய அரசு ரூ.1.70 லட்சம் கோடி வாங்குவது ஏன்? அதிர வைக்கும் புகார்!

    என்ன எதிர்ப்பு

    என்ன எதிர்ப்பு

    மத்திய அரசின் இந்த முடிவிற்கு பொருளாதார வல்லுனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். ஆர்பிஐ வைத்திருக்கும் உபரி நிதி என்பது மிக மிக அவசர தேவைக்கு மட்டும்தான். அரசின் கஜானா காலியாகிறது. ஒரே நாளில் பொருளாதாரம் மோசமடைந்தது என்றால் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.

    என்ன சரிவு

    என்ன சரிவு

    ஆனால் அரசு தற்போது ஏற்பட்ட பொருளாதார சரிவை சரி செய்ய எல்லாம் பணம் வாங்குகிறது. இது இப்போது பொருளாதார சரிவை சரி செய்ய வேண்டுமானால் உதவும். ஆனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டால் இது பெரிய சிக்கலை ஏற்படுத்தும். நாளையே பொருளாதார சரிவு ஏற்பட்டால் அரசு மொத்தமாக பிரச்னையை சந்திக்கும்.

    உலக அளவு

    உலக அளவு

    திடீர் என்று உலக அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்டால் அப்போது உதவுவதற்கு ஆர்பிஐ கூட வர முடியாது. ஆர்பிஐ பணத்தை இப்போதே மத்திய அரசு வாங்கிக் கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வரும் மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறி உள்ளனர் .

    வறுமை காரணம்

    வறுமை காரணம்

    இது கண்டிப்பாக தற்காலிகமாக பொருளாதார தேவையை சரிக்கட்ட உதவும். ஆனால் பல நாடுகள் அவர்கள் சென்ட்ரல் வங்கி பணத்தை இப்படி அவசரப்பட்டு வாங்கித்தான் திவால் ஆனது. முக்கியமான நாடுகள் திடீர் என்று வறுமையில் விழுந்ததற்கும் இப்படி உபரி நிதியை அவசரமாக பயன்படுத்தியதுதான் காரணம் என்று கூறுகிறார்கள்.

    இப்படியா

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா இதுகுறித்து செய்துள்ள டிவிட்டில், ஆர்பிஐ பணத்தை அரசு ஏன் கேட்கிறது. மிக மிக மோசமான பொருளாதார சூழ்நிலையிலும், போர் ஏற்படும் போதும் மட்டுமே இப்படி பணம் கேட்கப்படும். தற்போது தான் செய்த பொருளாதார தவறுகளை ஈடுகட்ட பாஜக அந்த பணத்தை வாங்கியுள்ளது.. ஆர்பிஐ அதன் நம்பகதன்மையை இழந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

    English summary
    Why getting RS. 1.76 Lakh Cr from RBI is not a good idea for Central Government? - Here is the reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X