டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிர்பயா பலாத்கார குற்றவாளி எகத்தாளம்.. மரண தண்டனையை ரத்து செய்ய சொல்லும் காரணத்தை பாருங்க

Google Oneindia Tamil News

டெல்லி: நிர்பயா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் ஒருவர், உச்சநீதிமன்றத்தில் தங்கள் தண்டனையையை குறைக்க வலியுறுத்தி வழங்கிய மனுவில், டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடை கேலி செய்வது போல கருத்து தெரிவித்துள்ளார்.

2012ம் ஆண்டு, டெல்லியில் பஸ்சில் வைத்து இளம் பெண் நிர்பயா பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேருக்கு, நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இதை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர் குற்றவாளிகள்.

அதில் ஒரு குற்றவாளியான அக்ஷய் சிங் தாக்கூர் தனது மனுவில், டெல்லி மாசு பற்றி தெரிவித்துள்ளார். அந்த மனுவில், பல நாடுகளில் மரண தண்டனை அகற்றப்பட்டுள்ளது குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமை மசோதாவை வாபஸ் பெறுக.. 600க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், முன்னாள் நீதிபதிகள் திரண்டனர்குடியுரிமை மசோதாவை வாபஸ் பெறுக.. 600க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், முன்னாள் நீதிபதிகள் திரண்டனர்

காற்று விஷம்

காற்று விஷம்

இவ்வாறு தனது நீண்ட மனுவின் ஒரு பகுதியில், டெல்லி காற்று மாசுபாடு குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி என்.சி.ஆர் மற்றும் மெட்ரோ நகரத்தில் காற்றின் தரம் எரிவாயு அறைக்குள் உட்கார்ந்து இருப்பதை போன்றது என்பதை இங்கு கவனிக்க வேண்டியது அவசியம், டெல்லி என்.சி.ஆர் நகரத்தின் நீரும் விஷத்தால் நிறைந்துள்ளது. டெல்லியில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

தூக்கு தனியாக தேவையில்லை

தூக்கு தனியாக தேவையில்லை

இந்த காற்று மாசு காரணமாக, ஆயுள் குறுகியதாக உள்ளது, பிறகு ஏன் எங்களுக்கு மரண தண்டனை? இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, மனுவில் பத்தி குறித்தும் தெரிவிக்கப்படுகிறது. 'சத்ய யுகம்' (இந்து புராணங்களில் குறிப்பிடப்பட்ட நான்கு யுகங்களில் முதலாவது யுகம்) காலகட்டத்தில், ​​மக்கள் "ஆயிரம் ஆண்டுகள்" வாழ்ந்தார்கள் என்று, பண்டைய இந்திய நூல்களான வேதங்கள், புராணங்கள் மற்றும் உபநிடதங்கள் போன்றவை கூறுகின்றன என்று இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயுட்காலம் வேறு கம்மியாம்

ஆயுட்காலம் வேறு கம்மியாம்

நாங்கள் இப்போது கலியுலகில் (இந்து புராணங்களில் 4வது யுகம்) இருக்கிறோம். இங்கு சராசரி ஆயுட்காலம் 50-60 ஆண்டுகளாக குறைந்துள்ளது. எனவே எங்களை தூக்கில் போட வேண்டாம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார் அக்ஷய் சிங் தாக்கூர். எப்படியாவது தண்டனையிலிருந்து தப்ப வேண்டும் என்பதற்காக இவ்வாறு பல காரணங்களை, குற்றவாளிகள் தெரிவித்துள்ளதை கவனிக்க முடிகிறது.

நிர்பயா வழக்கு பின்னணி என்ன

நிர்பயா வழக்கு பின்னணி என்ன

அக்ஷய் சிங் தாக்கூர் மட்டுமல்ல, முகேஷ் சிங், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகியோரும் நிர்பயா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகளாகும். நான்கு பேருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது. தண்டனையை உச்ச நீதிமன்றமும், உறுதி செய்தது. முன்னதாக, முகேஷ் சிங், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகியோர் தங்களது தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தை கேட்டு மறுஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Why give death penalty? asks Nirbhaya rape-murder convict to Supreme Court with some bizzare argument.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X