டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விசாரணைக்கு வந்த வத்ரா உடன் காரில் வந்தது ஏன்? பிரியங்கா காந்தி கொடுத்த சூப்பர் விளக்கம்!

அமலாக்கத்துறையின் விசாரணைக்கு வந்த ராபர்ட் வத்ராவுடன் துணைக்கு வந்தது ஏன் என்று பிரியங்கா காந்தி சூப்பர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: சொத்து குவிப்பு வழக்கிற்காக அமலாக்கத்துறையின் விசாரணைக்கு வந்த ராபர்ட் வத்ராவுடன் தானும் துணைக்கு வந்தது ஏன் என்று பிரியங்கா காந்தி சூப்பர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா மீது லண்டனில் சொத்து குவித்ததாக புகார் இருக்கிறது. இந்த வழக்கில் இவர் தற்போது ஜாமீனில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில் இன்று ராபர்ட் வத்ரா ஆஜரானார். டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி அவர் வாக்குமூலம் அளித்தார்.

காரில் வந்தார்

காரில் வந்தார்

இந்த நிலையில் வத்ராவுடன் அவரின் மனைவி பிரியங்கா காந்தியும், அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்தார். அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு மொத்தம் நான்கு கார்கள் வந்தது. ஒரு காரில் பிரியங்காவும், வத்ராவும் இருந்தனர். மூன்று காரில் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்தனர்.

உடனே சென்றார்

வத்ராவை அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிராப் செய்துவிட்டு பிரியங்கா காந்தி உடனே சென்றார். அங்கு கொஞ்சம் நேரம் கூட பிரியங்கா காந்தி காத்திருக்குவில்லை. பிரியங்கா காந்தியுடன் பாதுகாப்பிற்காக இரண்டு வாகனங்கள் திரும்பி சென்றது.

என்ன விமர்சனம்

இது தொடர்பாக சில விமர்சனங்கள் வைக்கப்பட்டது. பிரியங்கா காந்தி இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். இப்போது போய் அவர் இப்படி விசாரணைக்காகவெல்லாம் அலைகிறார். இது காங்கிரசின் பெயரை கெடுக்கும். பிரியங்காவின் இமேஜை மக்கள் மத்தியில் தவறாக கொண்டு செல்லும் என்று விமர்சனங்கள் எழுந்தது.

பதில்

பதில்

இதற்கு பிரியங்கா காந்தி பதில் அளித்துள்ளார். எப்போதும் போல தனது ஸ்டைலில் ஒரே வார்த்தையில் அவர் பதில் அளித்துள்ளார். அதில் ''நான் எப்போதும் என் கணவருக்கு துணை நிற்பேன்''என்று சொல்லியபடி காரில் பறந்தார். இவரின் இந்த விளக்கம் காங்கிரஸ் தொண்டர்களை நிம்மதிக்கு உள்ளாக்கி உள்ளது.

English summary
Why I came with Robert Vadra to ED office? explains Congress leader Priyanka Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X