டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏற்றுமதியாகும் இந்திய தடுப்பூசிகள்... உள்நாட்டில் விற்பனையாகாததற்கு இது தான் காரணம்

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்துகள் இதுவரை 13 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் உள்நாட்டில் போதிய அளவு விற்பனையாகவில்லை. இதனை தனியார் நிறுவனங்கள் சந்தைகளில் விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தடுப்பு மருந்து உற்பத்தியில் உலகின் மிகப் பெரிய நாடாக இந்தியா இருந்து வருகிறது. இதில் சீனாவையும் இந்தியா மிஞ்சி உள்ளது. தற்போது புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் தான் ஒரு நிமிடத்திற்கு 5000 டோஸ் கோவிட் தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்த மருந்துகள் வங்கதேசம், பூடான், மாலத்தீவு, மங்கோலியா, மியான்மர், நேபாளம், பஹ்ரைன், பிரேசில், மொரீசியஸ், மொராக்கோ, ஓமன், சீசெல்ஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு மில்லியன் டோஸ் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

Why Indias Vaccines Are Exported But Not Sold In Market For Public Use

ஆனால் இந்த மருந்துகளை உள்நாட்டில் விற்பனை செய்ய தங்களுக்கு அனுமதி அளிக்கும்படி முன்னணி தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. இது பற்றி அவர்கள் கூறுகையில், எங்களுக்கு நாள் ஒன்றிற்கு 2 மில்லியன் தடுப்பு மருந்துகள் மட்டும் தான் தேவை. தனியார் மருத்துவமனைகளும் பொது மக்களுக்கு செலுத்த துவங்க முடியும். ஆனால் இதனால் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் பற்றாக்குறை ஏற்படாது என்கின்றனர்.

அதே சமயம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு இந்த மருந்துகளை அளிக்க அரசு தயங்கி வருகிறது. இது பற்றி நிதி ஆயோக் அமைப்பின் டாக்டர் வி.கே.பால் அளித்துள்ள விளக்கத்தில், முன்னுரிமை அடிப்படையில் அனைத்து நாடுகளுக்கும் இது
அனுப்பப்பட்டு வருகிறது. நீங்கள் ஆரோக்கியமானவராகவும், 50 வயதிற்கு கீழ் உள்ளவராகவும் இருந்தால், நீங்கள் காத்திருக்க வேண்டும். உங்களை விட அதிக தேவை இருக்கும் நபருக்கு அது முதலில் செலுத்தப்படும். பொது மக்களின்
ஆரோக்கியத்தில் பொறுப்பு அதிகம் உள்ளது என்றார்.

கொரோனா காலத்துல... இந்தியாதான் நம் மிகப் பெரிய சொத்து... பாராட்டித் தள்ளும் ஐநா தலைவர்கொரோனா காலத்துல... இந்தியாதான் நம் மிகப் பெரிய சொத்து... பாராட்டித் தள்ளும் ஐநா தலைவர்

மேலும் அவர் கூறுகையில், முதல் 7 லிருந்து 8 மாதங்களுக்கு 30 கோடி பேருக்கு இதனை செலுத்த கவனம் செலுத்தி வருகிறோம். அதிக தேவை உள்ளவர்கள் யார் என்பதை நாங்கள் அறிவோம். ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்கள், 2 கோடி மன்களப் பணியாளர்கள் முதல் பட்டியலில் உள்ளனர். அடுத்தபடியாக 27 கோடி பேர் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களாகவும், வேறு சில நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களாகவும் உள்ளனர் . தனியாரிடம் ஒப்படைத்தால் இது சரியாக நடைபெறுமா என தெரியவில்லை என்றார்.

English summary
Why India's Vaccines Are Exported But Not Sold In Market For Public Use
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X