டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நமது ராணுவ வீரர்களை கொன்ற சீனா, நரேந்திர மோடியை புகழ்வது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, சீனா எதற்காக புகழ்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

லடாக் எல்லை பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரை சீன ராணுவம் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதேநேரம், இந்திய நிலப்பகுதியில் ஒரு இன்ச் கூட சீனாவால் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

Why is China praising Narendra Modi during this conflict? asks, Rahul Gandhi

இதுதான் சரியானது.. லடாக் குறித்து பிரதமர் மோடி சொன்ன கருத்து.. புகழ்ந்து தள்ளும் சீன ஊடகங்கள்! இதுதான் சரியானது.. லடாக் குறித்து பிரதமர் மோடி சொன்ன கருத்து.. புகழ்ந்து தள்ளும் சீன ஊடகங்கள்!

அப்படியானால் எதற்காக இந்த மோதல் நடைபெற்றது, எந்த இடத்தில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.

நேற்று ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் நரேந்திர மோடி சரணடைந்து விட்டார் என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் இன்று ராகுல்காந்தி மேலும் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், சீன மீடியாக்கள் நரேந்திர மோடியின் பேச்சை புகழ்கின்றன. இதுதொடர்பாக ஒரு நாளிதழின் செய்தியை பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, சீனா நமது ராணுவ வீரர்களைக் கொன்றுள்ளது, நமது நிலப்பகுதியை சீனா எடுத்துக்கொண்டது, அப்படியிருக்கும்போது, இப்படியான ஒரு மோதல் நிலையில், நரேந்திரமோடியை சீனா எதற்காக பாராட்ட வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
China killed our soldiers. China took our land. Then, why is China praising Mr Modi during this conflict? asks, Rahul Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X