டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வைரஸை தடுப்பதில் N95 மாஸ்க் ஏன் சிறந்தது? இரட்டை மாஸ்க் அவசியமா?.. மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தாலும் அதனையும் தாண்டி ஓமிக்ரான் வைரஸ் புகுந்து விட்டது. ஓமிக்ரான் வைரஸ் காரணமாக நாட்டில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

Recommended Video

    How to Select Mask?

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பதிவாகி உள்ளது. ஒரே நாளில் 703 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். நாட்டின் தற்போதய நிலை கொரோனா முதல் அலையை போல் உள்ளது. ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. கொரோனாவை தடுக்கும் முக்கிய பேராயுதம் தடுப்பூசி ஆகும். இதனால்தான் நாட்டில் மிக விரைவாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    தடுப்பூசி ஒருபக்கம் ஆயுதம் என்றால் வைரஸ் பரவுவதை தடுப்பதில் நாம் அணியும் மாஸ்க்குகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா தொடக்க காலத்தில் மாஸ்க் அணிய வேண்டும் என்று கூறிய நிலையில் இப்போது 2 மாஸ்க் அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இல்லையெனில் சாதராண மாஸ்க்கை விட N95 மாஸ்க் மிகவும் சிறந்தது என்று கூறுகிறார்கள். இதைப்பற்றி மருத்துவ நிபுணர்கள் கூறுவதை பாப்போம்.

    ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்- மாநில உரிமைகள் பறிப்பு- கூட்டாட்சியை கல்லறைக்கு அனுப்புறீங்க... உமர் அப்துல்லா ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்- மாநில உரிமைகள் பறிப்பு- கூட்டாட்சியை கல்லறைக்கு அனுப்புறீங்க... உமர் அப்துல்லா

     N95 மாஸ்க் என்றால் என்ன?

    N95 மாஸ்க் என்றால் என்ன?

    இந்த மாஸ்க்குகள் மற்றும் KN95s மற்றும் KF94s என அழைக்கப்படும். இந்த மாஸ்க்குகள் பெரும்பாலும் பாலிப்ரோப்பிலீனின் பல அடுக்குகள், செயற்கை இழைகளால் ஆனவை. தலையின் பின்பகுதியைச் சுற்றிச் செல்லும் பட்டைகள் மற்றும் மூக்கு மற்றும் வாயைச் சுற்றி இறுக்கமான முத்திரையை உருவாக்கும் விளிம்புகளுடன் அவை மிகவும் மென்மையான முகப் பொருத்தத்தை அடைய வடிவமைக்கப்பட்டுள்ளன. சரியாக அணிந்திருக்கும் N95 மாஸ்க்குகள் காற்றில் உள்ள துகள்களின் 95 சதவீதத்தையாவது வடிகட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

     ஏன் சிறந்தது?

    ஏன் சிறந்தது?

    சிறந்த மாஸ்க் N95 என்றும் N95 மாஸ்க்கின் தன்மை வைரஸ் பரவுவதை பெரும்பாலும் தடுக்கிறது என்றும் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் பொறியியல் மூத்த விஞ்ஞானி எரிக் டோனர் கூறியுள்ளார். ஆனால் N95 மாஸ்க் என்ற பெயரிலும் பல போலியான மாஸ்க்குகள் சந்தைக்கு வந்து விட்டது. இந்த போலி மாஸ்க்குகளால் பயனில்லை என்று மருத்துவ நிபுணர்கள் அடித்து கூறுகிறார்கள்.

     N95 போலி மாஸ்குகளை எப்படி கண்டறிவது?

    N95 போலி மாஸ்குகளை எப்படி கண்டறிவது?

    நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் (சிடிசி) N95 மாஸ்க் உற்பத்தியாளர்களை அதன் இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது. உண்மையான N95 மாஸ்க்கில் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான தேசிய நிறுவனத்தின் (NIOSH) அச்சிடப்பட்ட லோகோ மற்றும் ஒப்புதல் எண் இருக்கும். 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் சோதனை செய்த N95 மாஸ்க்குகள் 60 சதவீதம் தரத்திற்குக் குறைவாக இருப்பதாக CDC எச்சரித்துள்ளது. தரமான N95 மாஸ்க்குகள் மட்டுமே வைரஸ் பரவுவதிலிருந்து பாதுகாக்க உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    சில துணி முகமூடிகள் சிறிய துகள்களைத் தடுக்கும் வடிகட்டிக்கான உள்ளமைக்கப்பட்ட கட்டமைப்பை கொண்டுள்ளன, ஆனால் இவை அவ்வளவு பயனுள்ளதாக இல்லை மற்றும் அவற்றின் பயன்பாடு குறித்த தரவு குறைவாக உள்ளது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். N95 மாஸ்க் சிறந்தவை என்றாலும் அதனை அதிக முறை பயன்படுத்த கூடாது என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

     ஒரே N95 மாஸ்க்கை அதிக முறை பயன்படுத்தலாமா?

    ஒரே N95 மாஸ்க்கை அதிக முறை பயன்படுத்தலாமா?

    N95 மாஸ்க்குகள் ஒற்றை பயன்பாட்டிற்கானவை, ஆனால் பற்றாக்குறை இருக்கும்போது ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன்படுத்த முடியும் என்று CDC கூறியுள்ளது. ஆனாலும் N95s ஐ 5 முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது. ''சுவாசம் அல்லது வியர்வையால் முகமூடி ஈரமாகும்போது ஒரு மாஸ்க்கின் செயல் திறன் குறைகிறது. எனவே நாளுக்கு நாள் மாஸ்க்கை மாற்ற வேண்டும்' என்கிறார் தொற்று நோய் நிபுணரான டாக்டர் கிரிகோரி போலண்ட்.

     எப்போது N95 அணிய வேண்டும்?

    எப்போது N95 அணிய வேண்டும்?

    கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளும்போது, ​​கடுமையான நோய் அல்லது அதிக ஆபத்துள்ள வேலையில் இருக்கும் போது, ​​அதிக நேரம் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் போது , N95 அணிவதைக் கருத்தில் கொள்ளுமாறு CDC பரிந்துரைக்கிறது.

     இரட்டை மாஸ்க் அவசியமா?

    இரட்டை மாஸ்க் அவசியமா?

    N95 ஐப் பயன்படுத்துவது சாத்தியமில்லை என்றால் மற்ற இரட்டை மாஸ்குகளை அணிய வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் சாதாரண ஒற்றை மாஸ்குகளில் பயன் மிக மிக குறைவு என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    If the vaccine is a side weapon in preventing corona, then the masks we wear also play an important role in preventing the spread of the virus. Doctors say you should wear 2 masks now as Corona initially told you to wear a mask. Otherwise they say the N95 mask is much better than the normal mask
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X