டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சானிட்டைசரை கையில் தடவிய பிறகு கிச்சன் பக்கம் போனால் தீ பிடிக்குமா? உண்மை என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக சானிட்டைசர்கள் பயன்பாடு என்பது மிகவும் அதிகரித்து வருகிறது. ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. இதில் என்ன சிக்கல் இருக்கிறது என்கிறீர்களா?

சானிட்டைசரில் பயன்படுத்தக் கூடிய, முக்கியமான ஒரு பொருள் ஆல்கஹால் என்பதுதான். இதுதான் கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது. ஆல்கஹால் என்பது பொதுவாக எளிதில் தீப்பற்றக் கூடியது என்பது நீங்கள் அறிந்ததுதான். எனவேதான், சானிடைசர் பயன்படுத்திவிட்டு, கிச்சனுக்கு சென்று சமையல் செய்ய வேண்டாம் என்பது போன்ற எச்சரிக்கை செய்திகள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.

Why it is not a good idea to enter your kitchen after applying hand sanitiser

ஒரு பெண்ணுக்கு இப்படி சென்று கையில் தீ பிடித்தது போல போட்டோக்கள் வைரலாக சுற்றுகின்றன. ஆனால் அப்படி எந்த ஒரு பெண்ணுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இது எந்தளவுக்கு உண்மையானது என்பது பற்றி விசாரித்தபோது, சானிடைசர் தொழிலில் உள்ளவர்கள் கூறியதாவது: ஒரு சானிடைசர் பாட்டிலில் சுமார் 50 முதல் 80 விழுக்காடு அளவுக்கு ஆல்கஹால் இருக்கும்.

எத்தனால் மற்றும் ஐசோபுரபோனால் மற்றும் தண்ணீர் இதில் கலந்து இருக்கும். எனவே இவற்றை குறைந்த அளவுக்கு கைகளில் பயன்படுத்தலாம். மிக மிக அதிகமாக தண்ணீர் போல செலவிட வேண்டாம்.

உலகமே லாக் டவுன்.. சீனாவில் மட்டும் இன்று நள்ளிரவு முதல் லாக் டவுன் நீக்கம்.. நீடிக்கும் மர்மம்உலகமே லாக் டவுன்.. சீனாவில் மட்டும் இன்று நள்ளிரவு முதல் லாக் டவுன் நீக்கம்.. நீடிக்கும் மர்மம்

அந்த ஜெல் முழுமையாக காயும்வரை கைகளை நன்கு தடவிக் கொள்ளுங்கள். அது நன்கு காய்ந்த பிறகு சமையலறைக்குச் என்றால் போதுமானது. மற்றபடி, சானிட்டசைரை கிச்சனில் வைக்க வேண்டாம். அதிகம் வெப்பம் இருக்கக்கூடிய பகுதிகளிலும் வைக்க வேண்டாம் என்று தெரிவிக்கிறார்கள்.

English summary
There is a message going all over the internet advising people not to go near the flame in the kitchen after using a hand sanitiser. It says that the hand sanitisers contain spirit in rich quantity and therefore is flammable. The message also says that an incident had been reported in which the hands of a lady got burnt due to this. Please convey the same to near and dear ones, the message also reads.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X