டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாகிஸ்தானை கதிகலங்க வைத்த சம்பவம்.. மிராஜ் ரக விமானங்களை ஃபீல்டில் இறக்கியது ஏன்?.. பரபர தகவல்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Mirage 2000: மிராஜ் ரக விமானங்களை இந்தியா களத்தில் இறக்கியது ஏன்?- வீடியோ

    டெல்லி: பாகிஸ்தானை கதி கலங்க வைக்கும் அளவுக்கு நேற்றைய வான் வழித் தாக்குதலில் மிராஜ் ரக விமானங்களை களத்தில் இறக்கியது ஏன் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பாகிஸ்தானில் பாலக்கோடு உள்பட 4 பயங்கரவாத முகாம்களில் இந்தியா நேற்று அதிகாலை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் பலியாகியிருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் பயங்கரவாத அமைப்பின் முகாம்களை அழிப்பதற்காக மிராஜ் 2000 ரக விமானங்களை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக இந்தியா 12 மிராஜ் ரக விமானங்களை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

    பிரான்ஸ் நாடு

    பிரான்ஸ் நாடு

    இந்த விமானங்கள் அதிநவீன வசதிகளை கொண்ட நான்காம் தலைமுறை விமானங்களாகும். இந்த விமானங்கள் ரபேல் போர் விமானங்களை தயாரித்து வழங்கும் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆகும்.

    அதிநவீனமானவை

    அதிநவீனமானவை

    இந்தியாவில் இந்த விமானங்களின் 3 அணிகள் உள்ளன. அவற்றில் 50 விமானங்கள் உள்ளன. இவை ஒற்றை என்ஜினை கொண்டவையாகும். மேலும் இவை அதிநவீனமானவை ஆகும்.

    பொருத்தம்

    பொருத்தம்

    இந்த ரக விமானங்களிலிருந்து ஏவுகணைகளைக் கூட ஏவ முடியும். லேசர் வழிகாட்டும் குண்டுகளையும் வீச முடியும். இது மிகத் துல்லியமாக இலக்கை அடைந்து தாக்கும் வல்லமை படைத்தது ஆகும். இதில் தேலஸ் ஆர்டிஓய் 2 ரக ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    30 ஆண்டுகளுக்கு முன்பு

    30 ஆண்டுகளுக்கு முன்பு

    இதனால் 100 சதவீதம் துல்லியத்துக்கு குறைவில்லை. நீண்ட தூரத்திலும் குறி வைத்து தாக்குதல் நடத்தும் திறன் படைத்தவை இந்த மிராஜ் 2000. இந்த விமானங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளன.

    English summary
    Mirage 2000 multi-role aircraft was chosen for the strike for its capability to hit targets with "pin-point" accuracy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X