டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்டா பிளஸ் கொரோனா.. போதியளவில் சோதனைகள்கூட இல்லை..உங்கள் திட்டம்தான் என்ன? ராகுல் சரமாரி கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு பரவ தொடங்கியுள்ள நிலையில், தடுப்பூசிகள் பலன், பரிசோதனைகள் என மத்திய அரசிடம் உள்ள திட்டங்கள் என்ன என ராகுல் காந்தி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நாட்டில் தற்போது தான் கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே 50 ஆயிரத்தில் உள்ளது.

Why No Large-Scale Testing To Prevent Delta Plus Variant Rahul Gandhi

இருப்பினும் தற்போது டெல்டா பிளஸ் கொரோனா பரவ தொடங்கியுள்ளது நாட்டில் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா வகை கொரோனா மேலும் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா தோன்றியுள்ளது.

இந்த டெல்டா பிளஸ் கொரோனாவை மத்திய அரசு கவலைக்குரிய கொரோனாவாக பட்டியலிட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் நேற்று டெல்டா பிளஸ் கொரோனாவால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு மத்திய அரசு என்ன மாதிரியான திட்டங்களை வைத்துள்ளது என ராகுல் காந்தி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "டெல்டா பிளஸ் கொரோனா பற்றி மோடி அரசுக்கு எனது கேள்விகள். டெல்டா பிளஸ் கொரோனாவை கண்டறியவும் தடுக்கவும் மிகப்பெரிய அளவில் சோதனைகளை நடத்தப்படாதது ஏன்?

Recommended Video

    COVAXIN, COVISHIELD தடுப்பூசி பயனளிக்குமா? | Dr. Dr.Shanthi ravindranath Explain | Oneindia Tamil

    தற்போதுள்ள தடுப்பூசிகள் டெல்டா பிளஸ் வைரசுக்கு எதிராகப் பலன் அளிக்குமா, இது குறித்து முழு தரவுகள் எப்போது கிடைக்கும். கொரோனா 3ஆம் அலையைத் தடுக்க மத்திய அரசிடம் என்ன மாதிரியான திட்டம் உள்ளது" எனச் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    English summary
    Rahul Gandhi asked the Centre why large-scale testing is not being done to check. Rahul also questions will vaccine be effective against Delta plus variant.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X