டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த கோபம் இருக்குமே.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு தாமதமாக வாழ்த்திய மோடி? பரபர காரணம்!

நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி மிகவும் தாமதமாக வாழ்த்து தெரிவித்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    India-Born Abhijit Banerjee Win Nobel For Economics | சல்யூட்..சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை

    டெல்லி: நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி மிகவும் தாமதமாக வாழ்த்து தெரிவித்தார். இதற்கு பின்னிருக்கும் உண்மையான காரணமும், அபிஜித் பானர்ஜி குறித்த முக்கியமான சுவாரசிய தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.

    2019ம் வருடத்திற்கான நோபல் பரிசுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று இந்தியர் ஒருவருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி இந்த நோபல் பரிசை பெற்று இருக்கிறார்.

    இவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் மெக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிமானிடைசேஷன் புரியல.. மோசமான நடவடிக்கை.. அன்றே கணித்த நோபல் வெற்றியாளர் அபிஜித்.. எச்சரிக்கை!டிமானிடைசேஷன் புரியல.. மோசமான நடவடிக்கை.. அன்றே கணித்த நோபல் வெற்றியாளர் அபிஜித்.. எச்சரிக்கை!

    காங்கிரஸ் ஆட்சி

    காங்கிரஸ் ஆட்சி

    அபிஜித்தான் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தேர்தல் வாக்குறுதி ஒன்றை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபா தேர்தலின் போது வாக்குறுதி அளித்து இருந்தார்.

    மாதம் முழுக்க

    மாதம் முழுக்க

    அதன்படி காங். ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் குறைந்தபட்ச வருமானம் ரூ.6000 வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். 5 கோடி குடும்பம் இதனால் பயன் அடையும். 25 கோடி ஏழை மக்கள் இதன் மூலம் பயன் அடைவார்கள். ஏழ்மை நிலையில் உள்ளவர்களில் 20% பேர் ஊதிய உறுதித் திட்டதால் பயன்பெறுவர், என்று ராகுல் காந்தி கூறி இருந்தார்.

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    இந்த திட்டம், பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென், வகுத்த, ஏழ்மைக்கான வரையறை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கூறியது. இதற்கு மூளையாக இருந்த இன்னொரு நபர்தான் அபிஜித். இவர்தான் இந்த திட்டத்தை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவருக்கு தற்போது நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    என்ன வறுமை

    என்ன வறுமை

    அப்துல் லத்தீப் ஜெமீல் போவார்ட்டி ஆக்ஷன் லேப் (Abdul Latif Jameel Poverty Action Lab) என்ற மையத்தை உருவாக்கி இவர் ஆராய்ச்சி செய்துள்ளனர். உலகம் முழுக்க எப்படி வறுமையை ஒழிப்பது. எளிதான திட்டங்களை எப்படி கொண்டு வருவது. மக்களிடம் பண புழக்கத்தை எப்படி அதிகரிப்பது என்று இவர் நிறைய திட்டங்களை வகுத்து இருக்கிறார். அந்த ஆராய்ச்சியில் இவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

    தேர்தல் சமயம்

    தேர்தல் சமயம்

    லோக்சபா தேர்தல் சமயத்தில், இவர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூட மக்களிடம் கோரிக்கை வைத்தார். இதன் மூலம் வறுமை ஒழியும். இந்தியாவின் பணமதிப்பு அதிகரிக்கும் என்று அவர் வாக்குறுதி அளித்தார். ஆனால் மக்கள் இந்த வாக்குறுதியை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ராகுல் டிவிட்

    இது தொடர்பாக நேற்று ராகுல் காந்தி டிவிட் செய்தார். வறுமை ஒழிப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதில் அபிஜித் பானர்ஜி திறன்மிக்கவராக திகழ்வது பாராட்டத்தக்கது. இவர்தான் காங்கிரஸ் கட்சியின் நியாய் திட்டத்திற்கு பின் இருந்தவர். ஆனால் தற்போது மோடியும் அவரது அமைச்சர்களும் பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறார்கள் என்று டிவிட் செய்துள்ளார்.

    மோடி ஏன் லேட்

    மோடி ஏன் லேட்

    இதனால்தான் நேற்று பிரதமர் மோடி இவரை தொடக்கத்தில் வாழ்த்தவில்லை. பரிசு அறிவித்து சுமார் 10 மணி நேரம் கழித்துதான் பிரதமர் மோடி அபிஜித்தை வாழ்த்தினார். அவர் காங்கிரஸ் கட்சியை பாராட்டினார் என்பதால் இப்படி மோடி காலம் தாழ்த்தினார் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Why PM Modi took so long to wish Abhijit for his Nobel Prize? - Here is the reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X