டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவால் இறந்த முதியவரின் சான்றிதழில் இதயக் கோளாறு என குறிப்பிட்ட டெல்லி மருத்துவமனை

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்த 70 வயது முதியவரின் இறப்பு சான்றிதழில் அவர் இதய கோளாறால் உயிரிழந்ததாக டெல்லி ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கஜூரி பகுதியைச் சேர்ந்தவர் 70 வயது முதியவர். இவர் ஏற்கெனவே லாரி டிரைவராக இருந்தவர். இவருக்கு கடந்த மே 2 ஆம் தேதி கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டு டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருந்தது உறுதியானது.

இன்று மே 17-வஞ்சக வலையில் வீழ்த்தி கொல்லப்பட்ட தொப்புள்கொடி உறவுகளுக்கு வீரவணக்கம்- ராமதாஸ்இன்று மே 17-வஞ்சக வலையில் வீழ்த்தி கொல்லப்பட்ட தொப்புள்கொடி உறவுகளுக்கு வீரவணக்கம்- ராமதாஸ்

கோளாறு

கோளாறு

இதையடுத்து அவர் அந்த மருத்துவமனையிலிருந்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில் அவர் கடந்த மே 4 ஆம் தேதி இறந்துவிட்டார். ஆனால் அவரது இறப்புச் சான்றிதழில் இதய கோளாறு காரணமாக இறந்துவிட்டதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடித் துடிப்பு

நாடித் துடிப்பு

இதுகுறித்து மருத்துவமனையின் அறிக்கையில் 70 வயது முதியவர். இவர் ஆர்எம்எல் மருத்துவமனையிலிருந்து 4.10 மணிக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரது நாடித் துடிப்பும், ரத்த அழுத்தமும் கண்டறியவில்லை.

உறவினர்கள்

உறவினர்கள்

அவருக்கு இசிஜி எடுக்கப்பட்ட போது அது ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்தது. இதையடுத்து அவருக்கு இதய நோய்க்கான சிகிச்சை அளித்த போது சிகிச்சை பலனின்றி அவர் மே 4 ஆம் தேதி மாலை 4.45 மணிக்கு இறந்துவிட்டார். இதையடுத்து அவர் இறந்தது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

இறப்புச் சான்றிதழ்

இறப்புச் சான்றிதழ்

இவர் ஹிமாச்சல பிரதேசத்தில் லாரி டிரைவராக இருந்தார். அவருக்கு 2008-ஆம் தேதி எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அதுகுறித்து இறப்புச் சான்றிதழில் மருத்துவமனை நிர்வாகம் எதுவும் அறிவிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

English summary
Why the Delhi hospital gave death certificate for coronavirus positive patient as heart failure as the reason?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X