டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாகிஸ்தானிடம் காட்டும் ஆக்ரோஷத்தை ஏன் சீனாவிடம் காட்டுவதில்லை?: லோக்சபாவில் காங். கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: எல்லை பிரச்சனைகளில் பாகிஸ்தானிடம் காட்டும் ஆக்ரோஷத்தை சீனாவிடம் ஏன் நாம் வெளிப்படுத்துவதில்லை என லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார்.

இந்திய பெருங்கடற்பரப்பில் சீனாவின் போர்க் கப்பல்கள் ஊடுருவல் தொடர்பாக லோக்சபாவில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இன்று கேள்வி எழுப்பி பேசியதாவது:

 சீனாவுடன் எல்லை வரையறை தெளிவாக இல்லாததால் இருதரப்பிலும் ஊடுருவல்கள் நிகழ்கின்றன: ராஜ்நாத்சிங் சீனாவுடன் எல்லை வரையறை தெளிவாக இல்லாததால் இருதரப்பிலும் ஊடுருவல்கள் நிகழ்கின்றன: ராஜ்நாத்சிங்

புவியியலை மாற்ற முடியாது

புவியியலை மாற்ற முடியாது

நமது அண்டை நாடுகளில் பாகிஸ்தானும் சீனாவும் நம்மோடு மோதிக் கொண்டிருக்கின்றன. வரலாற்றை நாம் மாற்றி எழுத முடியும். ஆனால் புவியியல் அமைப்புகளை ஒருபோதும் மாற்றிவிட முடியாது.

திடமான நடவடிக்கை

திடமான நடவடிக்கை

பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தானுக்கு எதிரான நமது குரல் வலிமையானதாக இருக்கிறது. இந்த பிரச்சனையை மத்திய அரசு திடமாக எதிர்கொண்டு வருகிறது.

சீனாவின் ஊடுருவல்

சீனாவின் ஊடுருவல்

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கிறது. அந்த பாகிஸ்தானை சீனா பாதுகாத்து வருகிறது. இப்போது அந்தமான் நிக்கோபர் தீவுகள் வரை போர்க்கப்பல்களை சீனா அனுப்பியிருக்கிறது.

60 கி.மீ ஆக்கிரமித்த சீனா

60 கி.மீ ஆக்கிரமித்த சீனா

நமது நாட்டின் 50 முதல் 60 கி.மீ வரையிலான பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வருகிறது. இது தொடர்பான விவரங்களை நான் சமர்பிக்க விரும்புகிறேன்.

ஏன் மென்மைபோக்கு? அச்சமா?

ஏன் மென்மைபோக்கு? அச்சமா?

பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான எதிர்க்குரலை வெளிப்படுத்துகிறோம் நாம். அதேநேரத்தில் சீனாவுக்கு எதிரான நமது குரல் பலகீனமானதாக இருக்கிறது. அப்படியானால் நாம் சீனாவை கண்டு அச்சப்படுகிறோமா? இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார்.

English summary
Congress MP Adhir Ranjan Chowdhury asked that "If we are so strong in our responses to Pakistan, why the weakness in the way we respond to China. Are we scared of China?" in Loksabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X