டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹத்ராஸ் சம்பவத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி மனைவி தற்கொலை.. உ.பி.யில் ஷாக்

Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் நடைபெற்ற, தலித் இளம் பெண், பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்றுள்ள, டிஐஜி சந்திர பிரகாஷ் மனைவி, தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ நகரிலுள்ள சுசாந்த் கோல்ப் சிட்டி ஏரியாவில் சந்திர பிரகாஷ் வீடு உள்ளது. இங்கு நேற்று மாலை, அவர் மனைவி புஷ்பா பிரகாஷ் தூக்கில் தூங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 36 வயதான புஷ்பா ஏன் தற்கொலை செய்தார் என்பது இன்னும் தெரியவில்லை.

Wife of DIG part of SIT probing Hathras case dies

இது தற்கொலை என்று காவல்துறை கூறும் அதே நேரம், அவரது வீட்டில் தற்கொலை கடிதம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. சந்திர பிரகாஷ் 2005ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகும். இவர், உ.பி. அரசு ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைத்த 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவில் டிஐஜியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹத்ராஸ் பாலியல் வழக்கு...உத்தரப் பிரதேச போலீசாரை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்!! ஹத்ராஸ் பாலியல் வழக்கு...உத்தரப் பிரதேச போலீசாரை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்!!

ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது தலித் பெண், உயர் சாதியைச் சேர்ந்த கும்பலால் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அந்த பெண் சடலத்தை இரவோடு இரவாக போலீசார் தீயிட்டு எரித்துவிட்டனர். நாடு முழுக்க இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்த்ியது. இந்த வழக்கை விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை அம்மாநில அரசு அமைத்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Pushpa Prakash, the wife of an IPS officer died by suicide at her home in Uttar Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X