• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அசைன்மெண்ட் தந்த பாஜக.. பறக்கும் ரிப்போர்ட்கள்.. கலங்கும் எம்எல்ஏக்கள்.. 7 மாநில தேர்தல் பரபரப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: விரைவில் 7 மாநிலங்களிலும் தேர்தல் நடக்க போகிறது.. இதையடுத்து பாஜக இப்போதே தேர்தல்களை சந்திக்க தயாராகி வருவதுடன், சில அதிரடிகளையும் சத்தமில்லாமல் எடுத்து வருகிறது.

2024-ல் நடைபெறவிருக்கும் எம்பி தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக-வை மத்தியில் ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் தயாராகி கொண்டிருக்கின்றன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையத்துக்கு 4 மாதம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்!நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையத்துக்கு 4 மாதம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்!

அதேசமயம், 7 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.. இந்த 7 மாநிலங்களையும் கைப்பற்றும் யுக்தியை பாஜக மேலிடம் எடுத்து வருகிறது..

 பிரியங்கா

பிரியங்கா

இதில் டாப் லிஸ்ட்டில் உள்ளது உத்தரபிரதேசமும், பஞ்சாப்பும்தான்.. உபியில் ஜெயித்தே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் கங்கணம் கட்டி இறங்கி உள்ள நிலையில், பஞ்சாப்பையும் காங்கிரஸ் விடுவதாக இல்லை... பிரியங்கா காந்தி கடந்த ஒரு வருடமாகவே உபியில் அவ்வப்போது முகாமிட்டு வருகிறார்.. மேலும், அம்மாநிலத்தில் அதிக செல்வாக்குமிக்க கட்சிகளான, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் இந்த முறை ஆட்சியை கைப்பற்றியே ஆகவேண்டும் என முனைப்பு காட்டிவருகின்றன... இதனால் அங்கு பாஜக, சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி என்ற முப்பெரும் கட்சிகளுக்கும், களத்தில் அதிரடி காட்ட தயாராக இருக்கின்றன..

 முதல்வர் யோகி

முதல்வர் யோகி

முதல்வர் யோகிக்கான ஆதரவுகள் அங்கு குறைந்து வருவதாக செய்திகள் வந்தாலும், மற்றொரு புறம் எதிர்வரும் தேர்தலில் மோடி என்ற மாபெரும் பிம்பம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கணிப்புகள் கூறுகின்றன... இந்நிலையில்தான், பாஜக தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்ட முயன்று வருகிறது. அதன்படி, 2 விதமான முடிவுகளை எடுத்துள்ளதாம்..

 அமரீந்தர் சிங்

அமரீந்தர் சிங்

முதலில், அதிருப்தியாளர்களையும், சர்ச்சையில் சிக்கியவர்களையும் களையெடுக்க முடிவெடுத்துள்ளது.. இது உபி உட்பட 7 மாநிலங்களிலும் இதே போல பிளானை தொடங்கி உள்ளது.. பஞ்சாப்பை எடுத்து கொண்டால், கடந்த சில தினங்களாகவே பாஜக திணற தொடங்கி உள்ளது.. காரணம், திடீரென காங்கிரஸ் மேலிடம் இவ்வளவு கலக்கத்தை தங்களுக்கு தரும் என்று நினைக்கவே இல்லை.. கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு அமரீந்தர் சிங் முக்கியக் காரணம் என்று சொல்லப்பட்டு வந்தநிலையில், அவருடைய விலகல் கட்சிக்கு பின்னடைவாக அமையும் என்பதே பரவலான கருத்து.

சித்து

சித்து


இறுதியில் அமரீந்தர் ராஜினாமா செய்தது, காங்கிரஸ் கட்சிக்கு பலவீனமே என்றாலும், தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்கியது புத்திசாலித்தனமான முடிவு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. சித்துவுக்கு பதவியை தராமல் கவனமாக பார்த்து கொண்டாலும், தலித் சமூகத்தை முன்னிறுத்தியது காங்கிரஸ் கட்சிக்கு பலத்தைதான் தந்துள்ளது..

பாஜக

பாஜக

ஆனால், இதுதான் பாஜகவுக்கு கலக்கத்தையும் தந்து வருகிறது.. ஏற்கனவே விவசாய சட்டங்களுக்கு எதிராக பாஜகவுக்கு அங்கு அதிருப்தி உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், இத்தனை காலமும் காங்கிரசுக்குள் நடந்த உட்கட்சியை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நிலையில், திடீரென புதிய முதல்வரை நிறுத்தியதை பாஜக எதிர்பார்க்கவில்லை..

 7 மாநிலங்கள்

7 மாநிலங்கள்

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று சோனியா காந்தி அறைகூவல் விடுத்து வரும் நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக, தன்னை முன்னிறுத்தி கொள்ளும் அனைத்து காரியங்களிலும் இறங்கி உள்ளது.. உபி, பஞ்சாப் என்று மட்டுமில்லை, குஜராத், கோவா, மணிப்பூர், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் என 7 மாநிலங்களிலுமே களப்பணியை முடுக்கி விட்டுள்ளது.. அத்துடன் அந்த 7 மாநிலங்களின் கள ரிப்போர்ட்டையும் தரும்படி கேட்டிருந்தது.. அதன்படியே, அங்கெல்லாம் சத்தமில்லாமல் ஆய்வுகள் நடந்துள்ளதாம்..

ரிப்போர்ட்கள்

ரிப்போர்ட்கள்

இதைதவிர, கடந்த 5 ஆண்டுகளில் கட்சி எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரும் தங்கள் தொகுதிகளில் மேற்கொண்ட வளர்ச்சி பணிகள் குறித்து தனிப்பட்ட அறிக்கையையும் தர வேண்டும் என்று பாஜக மேலிடம் உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அதற்கான ரிப்போர்ட்டுகளும் மேலிடத்துக்கு பறந்துள்ளதாம். ஒருவேளை களரிப்போர்ட்டும், எம்எல்ஏக்கள் அனுப்பும் வளர்ச்சி பணிகள் குறித்த ரிப்போர்ட்டும் பாஜக மேலிடத்துக்கு திருப்தியை ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.. இல்லாவிட்டால் எம்எல்ஏக்களுக்கு சீட் கிடைப்பது கஷ்டம்தான் என்கிறார்கள்.

சான்ஸ்

சான்ஸ்

இப்படித்தான், கடந்த 2018-ல் ராஜஸ்தானில் தேர்தல் நடந்தபோது, 43 எம்எல்ஏக்களுக்கு சான்ஸ் கிடைக்காமல் போனது.. அதேபோல ஜார்க்கண்ட் தேர்தலிலும் 12 எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.. அதனால் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களின் பாஜக எம்எல்ஏக்கள் பீதியில் உள்ளனராம்... இப்படி களப்பணி, கள ஆய்வு, களையெடுப்பு, ஆலோசனை கூட்டங்கள் என தனித்தனியாக கவனம் செலுத்தி பாஜக முனைப்பு காட்டி கொண்டிருக்கிறதாம்.

English summary
Will BJP Win in Seven State Elections and what will Congress do the next
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X