டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பரூக் அப்துல்லா வருவாரா? அனைத்து கட்சி கூட்டத்தில் சரமாரி விவாதம்!

நாளை நடக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் காஷ்மீர் முன்னாள் முதல்வரும் காஷ்மீர் தேசிய கான்பிரன்ஸ் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா கலந்து கொள்வாரா என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: நாளை நடக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் காஷ்மீர் முன்னாள் முதல்வரும் காஷ்மீர் தேசிய கான்பிரன்ஸ் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா கலந்து கொள்வாரா என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த கூட்டம் நாளையில் இருந்து டிசம்பர் 13ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் 30 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

இதில் பல முக்கிய சட்டங்கள், திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. கடந்த லோக்சபா கூட்டத்தொடரில் காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை நீக்கியது, முத்தலாக் சட்டம், மோட்டார் வாகான சட்டம் என்று முக்கிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதேபோல் இப்போதும் அதிரடி சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது.

அனைத்து கட்சி கூட்டம்

அனைத்து கட்சி கூட்டம்

இந்த நிலையில் இன்று டெல்லியில் இதுகுறித்து விவாதிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். மொத்தமாக 27 கட்சியின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பாஜக எம்பிக்கள்

பாஜக எம்பிக்கள்

முக்கியமாக பாஜக எம்பிக்கள், திமுக, தெலுங்கு தேசம் எம்பிக்கள் இதில் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத்தில் என்ன ஆலோசனை செய்வது, எப்படி மசோதாக்களை நிறைவேற்றுவது என்று ஆலோசித்தனர்.

எதிர்க்கட்சிகள் எப்படி

எதிர்க்கட்சிகள் எப்படி

இதில் எதிர்க்கட்சிகள் எல்லாம், காஷ்மீர் முன்னாள் முதல்வரும் காஷ்மீர் தேசிய கான்பிரன்ஸ் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா குறித்து கேட்டனர். அவர் நாளை லோக்சபாவில் கலந்து கொள்வாரா? நாளைக்குள் அவர் விடுதலை செய்யப்படுவாரா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியது. ஒரு எம்பியை வீட்டு காவலில் வைத்து இருப்பது தவறு.

உடனே விடுதலை

உடனே விடுதலை

அது விதிமுறைக்கு எதிரானது. நியமானதும் கிடையாது. அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும். நாளை நடக்கும் லோக்சபா கூட்டத்தில் பரூக் அப்துல்லா கலந்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும், என்று 12க்கும் அதிகமான எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தது.

பதில் இல்லை

பதில் இல்லை

ஆனால் இதற்கு ஆளும் பாஜக அரசின் எம்பிக்கள் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. நாளை பரூக் அப்துல்லா கலந்து கொள்வது சந்தேகம் என்று கூறுகிறார்கள். நாளை ரபேல், அயோத்தி ஆகிய வழக்கின் தீர்ப்புகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடக்க வாய்ப்புள்ளது.

English summary
Will Farood Abdullah attend Parliament winter session? Opponents raise questions in all party meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X