டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வன்முறைகள் நிறுத்தப்பட்டால்தான் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்கில் விசாரணை- உச்சநீதிமன்றம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒன்றாக சேர்ந்து தேசிய கீதம்.. டெல்லி ஜம்மா மசூதியில் நெகிழவைக்கும் சிஏஏ போராட்டம் - வீடியோ

    டெல்லி: நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள், வன்முறைகள் நிறுத்தப்பட்டால்தான் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்கை விசாரிக்க முடியும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவ்வழக்குகள் எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்படவில்லை.

    Will hear CAA petitions only when violence stops, says CJI.

    இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டேவிடம் வழக்கறிஞர் வினீத் தண்டா ஒரு மனுவை அளித்தார். அதில், அமைதியை சீர்குலைக்கும் வகையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுகின்றன. இவற்றை சட்ட ரீதியாக தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

    இதற்கு கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி பாப்டே, நாடு முழுவதும் நடைபெற்று வரும் வன்முறைகளை நிறுத்தினால்தான் சி.ஏ.ஏ. தொடர்பான வழக்குகளை விசாரிக்க முடியும். தற்போதைய நிலையில் வழக்குகளை விசாரித்தால் அமைதியை கொண்டுவர இயலுமா? என தெரியவில்லை.

    அமெரிக்காவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைக்க ஈரானால் முடியும்! விளைவும் மிக பயங்கரமாக இருக்கும்! அமெரிக்காவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைக்க ஈரானால் முடியும்! விளைவும் மிக பயங்கரமாக இருக்கும்!

    உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்வதே அமைதியை கொண்டு வருவதற்குதான். நாடு தற்போது ஒரு கடினமான சூழ்நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, ஆகையால் மத்திய- மாநில அரசுகள் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றார்.

    English summary
    The Supreme Court said that it will hear the petitions challenging validity of Citizenship Amendment Act as soon as violence stops.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X