டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடைசியில் கை கொடுக்கும் இந்திய கம்யூனிஸ்ட்.. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைய முடிவு!

லோக்சபா தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் என்று தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கடைசியில் கை கொடுக்கும் இந்திய கம்யூனிஸ்ட்

    டெல்லி: லோக்சபா தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் என்று தகவல்கள் வருகிறது.

    லோக்சபா தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. கடந்த ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்கியது. வரிசையாக 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்றோடு தேர்தல் நடந்து முடிந்தது. நேற்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    Will Lend help to get majority: CPI May Join Opposition

    இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளின் படி, பாஜக கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியே அதிக இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 303 இடங்கள் வரை சராசரியாக வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

    இது எதிர்க்கட்சிகளுக்கு பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது. காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 115 இடங்களை வெல்லும். பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி கூட்டணி 36 இடங்களை வெல்லும். மற்ற மாநில கட்சிகள் 111 இடங்களை வெற்றிபெறும் இடங்களை வெல்லும் என்கிறார்கள்.

    இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் என்று தகவல்கள் வருகிறது. எதிர்க்கட்சிகளுடன் சிபிஐ கட்சி ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

    சிபிஐ கூட்டணி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கேரளாவில் பெரிய போட்டி நிலவி வருகிறது. அதேபோல் கம்யூனிஸ்டுகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பெரிய பகையே மேற்கு வங்கத்தில் உள்ளது. இந்த நிலையில்தான் இந்த பகையை மறந்து கூட்டணியில் இணைவதற்கு சிபிஐ முடிவு எடுத்து இருப்பதாக கூறுகிறார்கள்.

    யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் இருந்து, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால், கம்யூனிஸ்ட் கட்சி தனித்து விடப்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் சங்கடத்தை தவிர்க்க சிபிஐ எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைய முடிவெடுத்து உள்ளது என்கிறார்கள்.

    English summary
    Will Lend help to get majority: CPI May Join Opposition alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X