• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"கண்ணீர் தேசம்".. தொடர்ந்து எரியும் சுடுகாடுகள்.. குவியும் சடலங்கள்.. வருமா தேசிய சுகாதார அவசர நிலை!

|

டெல்லி: ஒரே இடத்தில் பிணங்களின் குவியல்களை போட்டு எரிக்கப்படும் நிலை இந்தியாவில உருவாகி உள்ளது.. இதனால், பிணங்கள் மீது எரியும் நெருப்பால் "இந்தியா ஒளிர்கிறது" என்ற ஆவேச கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் முன் வைக்கப்பட்டும் வருகிறது.. இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் கேட்டுக் கொண்டதுபோல, தேசிய சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுமா? என்ற கேள்வி நம்முள் எழுகிறது.

கொரோனாவின் 2வது அலை விஸ்வரூபம் எடுக்க 3 முக்கியமான காரணங்கள், கருத்துக்களாக முன்வைக்கப்படுகின்றன. இதில் முதலாவதாக கும்பமேளா நிகழ்ச்சி.

உத்தரபிரதேசத்தில் 12 வருஷத்துக்கு ஒருமுறை நடக்கும் இந்த கும்பமேளா விழாவில் லட்சக்கணக்கானோர் குவிந்துவிட்டனர்.. இந்த நிகழ்ச்சியின் கால இடைவெளி குறைக்கப்பட்டதே தவிர, நிகழ்ச்சிகள் தடுத்து நிறுத்தப்படவில்லை.. இந்த கும்பமேளாவுக்கு திரும்பியவர்களில் பலருக்கு தொற்று உறுதியாகி மிகப் பெரிய அளவில் பரவியதே இதன் பலனாக பார்க்கப்படுகிறது.

ஜஸ்ட்.. 24 மணி நேரம்தான்.. 3 போலீஸாரை காவு வாங்கிய கொரோனா.. கதி கலங்கும் சென்னை காவல்துறை..! ஜஸ்ட்.. 24 மணி நேரம்தான்.. 3 போலீஸாரை காவு வாங்கிய கொரோனா.. கதி கலங்கும் சென்னை காவல்துறை..!

 பொறுப்பு

பொறுப்பு

அடுத்ததாக, மேற்கு வங்கத்தில் இத்தனை கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டுமா? 8 கட்ட வாக்குப்பதிவு அங்கு தேவையா? அதற்கான அவசியம் என்ன? இந்த 8 கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரங்களில் மக்கள் கூடி வரும் நிலையில், தொற்ற பாதிப்பு அதிகமாகி வருவதற்கு யார் பொறுப்பேற்பது? என்பன போன்ற கேள்விகளும் உருவாகி வருகின்றன.

 மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

வாக்குப் பதிவை சுருக்குமாறு மமதா பானர்ஜி பலமுறை கேட்டுக் கொண்டும் கூட அதை தேர்தல் ஆணையம் அலட்சியம் செய்தது ஏன் என்ற கேள்வியும் கடுமையாக கிளம்பியுள்ளது. மக்கள் செத்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தையே இது பிரதிலிபதிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் பிரசார கூட்டங்களை, அரசியல் கட்சிகள் பொதுநலன் கருதி ரத்து செய்ய வேண்டும் என்று ராகுல்காந்திகூட கருத்து தெரிவித்திருந்தார்.

 ஆக்ஸிஜன்

ஆக்ஸிஜன்

2ம் அலையின் சீரியஸ் தன்மையை கடந்த டிசம்பர் மாதமே விஞ்ஞானிகள் எச்சரித்தும், ஆக்ஸிஜனை ஏற்றுமதி செய்ததற்கான காரணம் இதுவரை விளங்கவில்லை.. அதேசமயம், கப்பலில் இருந்து முன்னதாகவே போதுமான ஆக்ஸிஜனை இறக்குமதி செய்திருக்கலாமே என்ற ஆதங்கமும் நமக்கு எழுகிறது.. கடந்த வருடம், முதல் கொரோனா அலையில் இருந்து இன்னமும் மத்திய அரசு, சரியான பாடத்தை கற்று கொள்ளவில்லை என்பதையே, இன்றைய கொரோனா "ஆக்ஸிஜன் மரணங்கள்" எடுத்துக்காட்டி வருகின்றன.

 ஒளிரும் இந்தியா

ஒளிரும் இந்தியா

2 நாளுக்கு முன்புகூட ஒரு போட்டோ இணையத்தில் வைரலானது.. ஒரே இடத்தில் பல சடலங்களை குவியலாக போட்டு எரித்துள்ளனர்.. சுற்றிலும் புகைமூட்டம்.. ஆரஞ்சு கலரில் அந்த பகுதியே எரிந்து கொண்டிருந்தது.. இந்த போட்டோதான் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது... பிணங்கள் மீது எரியும் நெருப்பால் "இந்தியா ஒளிர்கிறது" என்று பலரும் இதை பார்த்து கடுமையாக விமர்சித்திருந்தனர்..

 சுடுகாடுகள்

சுடுகாடுகள்

இதற்கு பிறகு, சுடுகாடுகளில் சடலங்களுடன் ஆம்புலன்ஸில் காத்திருப்பது, மைதானங்களில் சடலங்களை மொத்தமாக போட்டு எரிப்பது, தரமற்ற உடைந்த கதவுகள் கொண்ட ஆம்புலன்ஸ்களில் இருந்து சடலங்கள் கீழே பொத் பொத்தென்று விழுவது என இதயத்தை நொறுக்கும் வீடியோக்கள் நேற்றில் இருந்து வெளியாகி வருகின்றன. இப்படிப்பட்ட சமயத்தில்தான், கசில் சிபல், தேசிய சுகாதார அவசரநிலையை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஒரு யோசனையை சொல்லி இருந்தார். இது தொடர்பாக ஒரு ட்வீட்டும் பதிவிட்டிருந்தார்..

பாதிப்பு

பாதிப்பு

அதில், "கொரோனா தொற்றில் இருந்து மீளும் வேகத்தைவிட, அதன் பாதிப்பு வேகம் அதிகமாக இருக்கிறது. மோடிஜி, தேசிய சுகாதார அவசர நிலையை அறிவியுங்கள்... தேர்தல் ஆணையம், தேர்தல் பிரசாரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்... நீதிமன்றங்கள், மக்களின் உயிர்களைக் காக்க வேண்டும்" என்று கேட்டு கொண்டிருந்தார். தேசிய சுகாதார அவசரநிலை பிறப்பித்தல் குறித்து தனது கருத்தை தெரிவித்தது சுப்ரீம் கோர்ட்டும் தெரிவித்திருந்தது.

 அமித்ஷா

அமித்ஷா

இப்படிப்பட்ட சூழலில், நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத்தில், கொரோனா மருத்துவமனையை ஆய்வு செய்து, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்... குஜராத்தில் தொற்று எண்ணிக்கையும், பாதிப்புகளும் அதிகம் என்றாலும், மற்ற மாநிலங்களையும் இதேபோல பிரதமரும், உள்துறை அமைச்சரும் நேரில் உட்கார்ந்து பேசி, முக்கியத்துவம் தந்தால் நன்றாக இருக்கும்.. அத்துடன் நிலைமை கைமீறி போய் கொண்டிருப்பதால், கபில் சிபலின் இந்த கோரிக்கையை பிரதமர் மோடி பரிசீலிப்பாரா என்ற எதிர்பார்ப்பு மிகுந்து ஏற்பட்டுள்ளது..!

English summary
Will PM Modi Declare A National Health Emergency
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X