டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜூன் 21ம் தேதி லே போவாரா மோடி.. யோகா செய்வாரா?.. தொடரும் குழப்பம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தையொட்டி லே பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி யோகா செய்வார் என்று முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனாவைரஸ் பரவலால் இது நடைபெறுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அதேசமயம், பிரதமர் லே போவது சந்தேகம்தான் என்று ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர். சர்வதேச யோகா தினம் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் இது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் யோகா தினத்தை லே பகுதியில் யோகா செய்து கொண்டாட பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார்.

Will PM Modi go to Leh to celebrate International Yoga Day?

லடாக் யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட பகுதிதான் லே. ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக பிரதமர் லே போவாரா இல்லையா என்பது சந்தேகமாகியுள்ளது. இதுதொடர்பாக எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்ய ராஜேஷ் கொட்டேச்சாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இதுகுறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்தார். அதேசமயம், இந்த ஆண்டு யோகா தினம் டிஜிட்டல் மீடியம் மூலமாக கொண்டாடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே பிரதமர் லே போக மாட்டார் என்றே தெரிகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு பயணிப்பதை தவிர்க்கவும்.. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா! ஆஸ்திரேலியாவுக்கு பயணிப்பதை தவிர்க்கவும்.. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா!

லடாக்கை மையமாக வைத்து சீனாவும் நம்மிடம் வம்பு செய்து வருகிறது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே பேச்சுக்களும் தொடங்கப்பட்டுள்ளன என்பது நினைவிருக்கலாம்.

English summary
It is doubtful PM Modi will go to Leh to celebrate International Yoga Day on June 21, says sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X