India
  • search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இவருமா?".. பாஜகவுக்கே சான்ஸ்.. துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 6 ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.

ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ந் தேதி நடைபெற உள்ளது.. இந்த பதவிக்கு திரௌபதி முர்மு என்ற ஒடிசா மாநிலத்தைச் சேந்த பழங்குடியின தலைவரை பாஜக முன்னிறுத்தி உள்ளது..

இவரை குடியரசுத் தலைவராக்குவதன் மூலம் அடுத்து வரும் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில், நாற்காலியை எட்டிப்பிடித்து விடலாம் என்பதே பாஜகவின் பிளானாக உள்ளதாக கூறப்படுகிறது.

மாட்டிகிச்சு.. இத விட்றாதீங்க! காங்கிரசின் ஸ்கெட்ச் - கையை பிசையும் பாஜக.. எதிராக திரும்பிய கத்தி மாட்டிகிச்சு.. இத விட்றாதீங்க! காங்கிரசின் ஸ்கெட்ச் - கையை பிசையும் பாஜக.. எதிராக திரும்பிய கத்தி

 யஷ்வந்த் சின்ஹா

யஷ்வந்த் சின்ஹா

மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி உட்பட எதிர்க்கட்சியினர் பலரும் ஒன்றாக இணைந்து யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளனர்... அதேபோல, தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்ட் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது.. ஆகையால் அதற்கு முன்னதாக புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும்...

 வேட்பு மனு தாக்கல்

வேட்பு மனு தாக்கல்

இதையடுத்து, தலைமை தேர்தல் ஆணையம் துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பை முன்னமே வெளியிட்டிருந்தது.. அதன்படி, 6ல் தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. அன்றைய தினமே ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் வேட்பு மனு தாக்கல் ஜூலை 5ல் துவங்கும், ஜூலை 19, வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள், ஜூலை 20 முதல் வேட்பு மனு மீதான பரிசீலனை துவங்குகிறது என்றும் அறிவிப்பு வெளியானது.. அதன்படி, இன்றைய தினம் துணை குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கியது..

 துணை குடியரசு தலைவர்

துணை குடியரசு தலைவர்

துணை குடியரசுத் தலைவர் தேர்தலை பொறுத்தவரை, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் மற்றும் நியமன எம்பிக்கள் வாக்களிப்பார்கள். மொத்தமுள்ள 775 எம்பிக்களில் 388 எம்பிக்கள் ஓட்டு போட்டால், துணை குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க முடியும்.. அந்த வரிசையில், பாஜக கூட்டணியிடம் 395 எம்பிக்கள் இப்போதைக்கு இருப்பதால், பாஜக நிறுத்தும் வேட்பாளரே வெற்றி என்று தற்சமயம் உறுதியாகி உள்ளது

 முக்தார் அப்பாஸ்

முக்தார் அப்பாஸ்

அந்த வகையில், வெங்கையா நாயுடு, தன்னை இந்த முறையும் வேட்பாளராக பாஜக நிறுத்தும் என்று நம்பிக் கொண்டு இருக்கிறார்.. கட்சியில் சீனியர் என்பதாலும், இவருக்கு வேறு பதவி எதுவும் இல்லாத காரணத்தினாலும் இவரை பாஜக வேட்பாளராக தேர்ந்தெடுக்குமா தெரியவில்லை.. அதேபோல, பாஜகவை சேர்ந்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பெயரும் இதே குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் லிஸ்ட்டில் உள்ளது.. விரைவில் எம்பி தேர்தல் உள்ள நிலையில், சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக, இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? தெரியவில்லை.

 செம சான்ஸ்

செம சான்ஸ்

ஆனாலும், இந்த லிஸ்ட்டில் டாப்பில் உள்ளவர் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்தான்.. இவர் ஏற்கனவே பாஜகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக சார்பில் இவர் நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் கடந்த 4 நாட்களாகவே வட்டமடிக்கின்றன.. தன்னுடைய பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதுக்கட்சியை, பாஜகவுடன் இணைத்து, கட்சியிலும் இணைவார் என்கிறார்கள்.. இதனிடையே, நம்முடைய தமிழக ஆளுநர் ரவி, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மும்முரமாகி வருகிறார் என்றுகூட செய்திகள் வந்தன.. எனினும், யாருக்கு சான்ஸ் அடிக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Will TN governor Ravi contest in the vice presidential election and election nomination process for august 6 polls begins today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X