டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

Google Oneindia Tamil News

டெல்லி: நோபல் பரிசு பெற்ற அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ தம்பதியினர் மற்றும் மைக்கேல் கிரேம் ஆகியோருக்கு 2019-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான்ன நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. மும்பையில் பிறந்து கொல்கத்தா, டெல்லியில் பயின்றவர் அபிஜித் பானர்ஜி.

Wishes pour in for Nobel laureate Abhijit Banerjee

நோபல் பரிசை வென்ற அபிஜித் பானர்ஜிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் அபிஜித்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வறுமை ஒழிப்புக்கான சாத்தியங்களை ஆராய்வதில் அபிஜித் பானர்ஜி திறமை கொண்டவ்வராக இருப்பது பாராட்டுக்குரியது என வாழ்த்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கல்வி, சுகாதாரத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு அபிஜித்தின் கண்டுபிடிப்புகள் உதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் உலக அளவில் வறுமை ஒழிப்புக்கான புதிய அணுகுமுறையை உருவாக்கியதற்காக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டூஃப்ளோ, மைக்கேல் கிரெம்மர் ஆகியோருக்கு வாழ்த்துகள்! வறுமை ஒழிப்புக்கான அவர்களின் பணி தொடரட்டும்! என வாழ்த்தியுள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உட்பட ஏராளமான தலைவர்கள் அபிஜித்துக்கு வாழ்த்துகள்தெரிவித்துள்ளனர்.

English summary
Political leaders had congratulated Nobel laureate Abhijit Banerjee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X