டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரும்பான்மையுடன் மீண்டும் பாஜக ஆட்சி.. காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றமே.. என்டிடிவி எக்ஸிட் போல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Exit polls 2019 | பாஜகவிற்கு சாதகமான கருத்துக்கணிப்புகள்

    டெல்லி: மக்களவை தேர்தல் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்து கணிப்பில் பெரும்பாலும் மீண்டும் பாஜ ஆட்சியே வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

    இந்நிலையில் என்டிடிவி நடத்திய எக்ஸிட் போல் முடிவிலும் இக்கருத்தே எதிரொலித்துள்ளது. 17-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்றுடன் முடிந்துள்ள நிலையில், வரும் வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் மத்தியில் ஆட்சியை பிடிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் எகிறியுள்ளது

    With the majority, the BJP regime is again NDTV Exit poll results

    மாலை 6.30 மணிக்கு பிறகு தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன், பெரும்பான்மையான முன்னணி ஊடகங்கள் தாங்கள் நடத்திய எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டு கட்சிகளை திக்குமுக்காட செய்துள்ளன.

    அதன்படி பிரபல முன்னணி ஊடகங்களில் ஒன்றான என்டிடிவி நடத்திய எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைக்கும் என கூறப்பட்டுள்ளது.

    என்டிடிவி எக்ஸிட் போல் முடிவுகளின் படி தேசியளவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 302-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரதான கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கு 128 முதல் 132 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என என்டிடிவி கணித்துள்ளது. பிறகட்சிகளுக்கு 112 இடங்கள் வரை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

    Exit polls: தென்னிந்தியாவின் பாதையே தனி.. 3 மாநிலங்களில் பாஜகவுக்கு அடி.. கர்நாடகத்தில் அட! Exit polls: தென்னிந்தியாவின் பாதையே தனி.. 3 மாநிலங்களில் பாஜகவுக்கு அடி.. கர்நாடகத்தில் அட!

    மராட்டிய மாநிலத்தை பொறுத்த வரை பாஜக - சிவசேனா கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது

    நாட்டிலேயே அதிக தொகுதிகளை உடைய உத்தரபிரதேசத்தில் பாஜக 46 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி 32 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் என்டிடிவி எக்ஸிட் போல் கூறியுள்ளது

    English summary
    NDTV exit poll released and said Bharatiya Janata Party will eventually come to power with a majority
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X