டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிறிது நேரத்தில் முதலாவது சந்திர கிரகணம்- இந்தியாவில் தெரியும் என எதிர்பார்ப்பு

இன்று இரவு 2020-ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் நிகழ்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: 2020-ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இன்னும் சற்று நேரத்தில் வானில் நிகழ்கிறது. இந்தியாவில் மேகமூட்டம் இல்லாமல் இருந்தால் வெறும் கண்களால் இதை பார்க்க முடியும்.

சந்திர கிரகணம் என்பது நிலவுக்கும், சூரியனுக்கும் இடையே பூமி கடக்கும்போது நடக்கும் ஒரு நிகழ்வாகும். பூமியின் நிழல் இதனால் சந்திரனில் விழும். அப்போது சந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.

Recommended Video

    தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது நெருப்பு வளைய சூரிய கிரகணம்

    நடப்பு ஆண்டில் மொத்தம் 4 சந்திர கிரகணங்கள் நிகழ இருக்கின்றன. இதில் முதல் சந்திரகிரகணம் இன்று இரவு நிகழ்கிறது.

    ஓநாய் சந்திர கிரகணம் 2020: என்ன பாதிப்பு ஏற்படும்ஓநாய் சந்திர கிரகணம் 2020: என்ன பாதிப்பு ஏற்படும்

    எப்படி இருக்கும்

    எப்படி இருக்கும்

    இந்த சந்திர கிரகணத்தால் பூமியில் விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்திற்கு சற்றே மங்கிய நிலையில் காணப்படும். இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என பெயரிடப்பட்டுள்ளது. கிரகணம் உச்சியில் வரும்போது நிலவின் வெளிப்புற அடுக்கு மீது பூமியின் நிழல் விழும்.

    எங்கு தெரியும்

    எங்கு தெரியும்

    தமிழகத்தில் இந்த சந்திர கிரகணத்தை பார்க்கலாம் . இந்தியாவில் மற்ற நகரங்கள், மேலும் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மேக மூட்டம் இல்லாத நிலையில் தெளிவாக இது தெரியுமாம். நடப்பு ஆண்டில் மொத்தம் 4 சந்திர கிரகணங்கள் நிகழ இருக்கின்றன.

    அட செம

    அட செம

    இதனால் நிலவு இன்று இரவு மொத்தமாக மங்கி காணப்படும். கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது 90 சதவிகித நிலவு பூமியால் மறைக்கப்படும். நிலவு கொஞ்சம் சிவப்பு நிறத்தில் காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்திய நேரம்

    இந்திய நேரம்

    இந்திய நேரப்படி இரவு 10.37 மணி முதல் அதிகாலை 2.42 மணிவரை இந்த சந்திர கிரகணம் நீடிக்கும். நாசா தான் இதற்கு ஓநாய் சந்திரகிரகணம் என்று பெயர் வைத்தது. தமிழகத்தில் இதை காண பல இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    English summary
    Wolf Moon Eclipse: First one of year's Lunar Eclipse will happen today night.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X