டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தண்ணீர் பிரச்சினையில் மருமகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த குடும்பம் - தீக்குளித்து தற்கொலை செய்த தீபா

தண்ணீர் பிரச்சினையில் மருமகளை மண்ணெண்ணெய் ஊற்றி கொடூரமாக எரித்துக்கொன்றிருக்கின்றனர். அதே போல 2000 ரூபாய் பணத்திற்காக இளம் பெண் ஒருவர் குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றியதோடு தானும் தீக்குளித்து தற்கொல

Google Oneindia Tamil News

டெல்லி: குடும்ப பிரச்சினையில் பெண்கள் காவு வாங்கப்படுகின்றனர். மத்திய பிரதேசத்தில் சொத்து பிரிவினை நடந்து முடிந்து தண்ணீர் பிரச்சினையில் இளம் பெண் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி ஒரு குடும்பமே எரித்து கொன்றுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் கணவனுடன் 2000 ரூபாய் பணம் கேட்டு ஏற்பட்ட பிரச்சினையில் பிள்ளைகளுடன் தானும் சேர்ந்து தீக்குளித்து எரிந்து போனார்.

தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் பெயர் தீபா என்பதாகும். காசியாபாத்தில் உள்ள முராத் நகரில் தீபா தனது கணவர் கைலாஷ், மாமியார், மாமனாருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். இவர்களுக்கு லலித் என்ற மகனும் 2 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். தீபாவிற்கு 2000 ரூபாய் பணம் தேவைப்பட்டது. தனது கை செலவிற்காக கணவரிடம் 2000 ரூபாய் கேட்டிருந்தார். ஆனால் அதை கைலாஷ் கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் கைலாஷ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

Woman set on fire over water dispute in Madhya Pradesh

ஆத்திரமடைந்த தீபா அறைக்குள் புகுந்து கதவை பூட்டிக்கொண்டார். தன்மீதும் குழந்தைகள் மேலும் மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளித்து எரிந்து போனார். தகவலறிந்த தீபாவின் குடும்பத்தினர் இது வரதட்சணை கொடுமையாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு போலீஸிடம் புகார் அளித்தனர். தீபாவின் பெற்றோர் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் தீபாவின் கணவரையும் மாமியாரையும் கைது செய்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் கடந்த வாரம் புதன் கிழமை தீபா தனது கணவர் கைலாஸிடம் தன்னுடைய தனிப்பட்ட செலவுக்காக ரூ 2000 கேட்டிருந்தார். ஆனால் கைலாஸ் அதை தர மறுத்தார். இருவருக்கும் தேவையற்ற வாக்கு வாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தர முடியாது என்று சொல்லி தீபாவை அடித்து விட்டு கைலாஸ் வீட்டை விட்டு வெளியே போய் விட்டார். அதை தாங்க முடியாத தீபா ஆத்திரத்தில் மண்ணெண்ணய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.

சிறுவன் லலித் மட்டும் எப்படியோ தப்பித்து விட வேண்டும் என நினைத்து வெளியில் வந்துவிட்டான். தற்போது தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் முராத் நகர் காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 304 பி (வரதட்சணை மரணம்) இன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. லலித் ஒரு மருத்துவமனையில் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இதே போல மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பதோரா கிராமத்தில் ஒரு குடும்பத்தில் மருமகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளனர். கூட்டுக்குடும்பத்தில் வசிக்கும் அந்த பெண்ணிற்கு குடும்பத்தினரே எமனாகியுள்ளனர். மாமானார், மாமியார், என கணவர் குடும்பத்தினர் அனைவரும் அந்தப் பெண்ணை எரித்து கொன்றுள்ளனர்.

கொல்லப்பட்ட பெண்ணின் மகள், அந்த சம்பத்தை அதிர்ச்சியுடன் போலீசில் தெரிவித்துள்ளார். என்னுடைய பாட்டி உள்பட எல்லோரும் என்னுடைய அம்மாவின் மேல் தீ வைத்து எரித்தனர் என்று கூறியுள்ளார். சொத்துத்தகராறு ஏற்பட்டது. சொத்துக்களை பிரித்தனர். தண்ணீர் பங்கீடு தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. அனைவருமே என்னுடைய அம்மாவை அடித்து எரித்து விட்டனர் என்று அழுது கொண்டே கூறினார்.

போலீஸ் நடத்திய விசாரணையில் வீட்டிற்கு பொதுவான அடிபம்ப் உள்ளது. அந்த அடிபம்பில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டு கொலையில் முடிந்துள்ளதாக தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குடும்பத்தினர் அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

English summary
A woman in Badora village of the district allegedly set her on fire over a water dispute.The mother and her two children committed suicide by pouring kerosene on her husband for not paying Rs 2000
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X