டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார்.. உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம்.. பலர் கைது!

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே போராடிய பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

டெல்லி: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே போராடிய பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

தற்போது உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. நேற்று தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் வழக்கில் நடத்தப்பட்ட உள் விசாரணையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பிற்கு எதிராகத்தான் தற்போது பலர் உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள்.

Women lawyers and activists today held a protest outside the SC against CJI Ranjan Gogoi

கடந்த சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயதாகும் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார். இதை விசாரிக்க தனி குழு அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போட்பே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி அமர்வு இதை விசாரித்தது. இந்த விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தலைமை நீதிபதி மீதான புகார் நிரூபிக்கப்படவில்லை. ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க அவசியம் இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பிற்கு எதிராகத்தான் தற்போது போராட்டம் நடந்து வருகிறது.

பல்வேறு பெண்கள் அமைப்புகள், பெண் வழக்கறிஞர் அமைப்புகள், கல்லூரி மாணவிகள், சமூக ஆர்வலர்கள் சேர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த போராட்டத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு எதிரான கோஷங்கள், பலகைகள் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாலியல் புகார்.. தலைமை நீதிபதிக்கு எதிராக போராட திட்டம்.. உச்ச நீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு! பாலியல் புகார்.. தலைமை நீதிபதிக்கு எதிராக போராட திட்டம்.. உச்ச நீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு!

இந்த நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்ட 25க்கும் அதிகமான பேர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனால் அங்கு தற்போது போலீசார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.

English summary
Delhi: Women lawyers and activists today held a protest outside the Supreme Court against the procedure adopted to deal with sexual harassment case against CJI Ranjan Gogoi. Section 144 has been imposed outside SC following the protes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X