டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேச்சு சரியில்லை.. இதெல்லாம் 'பாவச் செயல்ங்க.'. பாஜகவை விளாசும் பிரியங்கா காந்தி

Google Oneindia Tamil News

டெல்லி: விவசாயிகள் பற்றி பாஜக தலைவர்கள் கூறும் கருத்துக்கள் பாவகரமானது என்று, காங்கிரஸ் முன்னணி தலைவர் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், ஒரு மாதத்தை கடந்துவிட்டது. ஆனால் இந்த போராட்டம் குறித்து பாஜக தலைவர்கள் சிலர் கூறிய கருத்துக்கள் சர்ச்சையாகின.

Words They are Using for Farmers Amount to Sin - Priyanka Gandhi

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் சமீபத்தில் அளித்த பேட்டியில், விவசாயிகளை இழிவுபடுத்தி பாஜக தலைவர்கள் பேசுகிறார்கள். நகர்ப்புற நக்சலைட்டுகள், காலிஸ்தானியர்கள், குண்டர்கள் என்று பல பெயர்களில் விவசாயிகள் அவமரியாதை செய்யப்படுகிறார்கள் என்று கூறினார்.

இந்த நிலையில் பிரியங்கா காந்தி கூறுகையில், விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாய சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். விவசாயிகளை பற்றி அவமரியாதையாக பேசுவது பெரிய பாவச் செயல் என்றார்.

டிவிட்டரிலாவது 31ம் தேதி புதுக் கட்சியை அறிவிப்பாரா ரஜினி.. துரத்தும் 'அழுத்தம்'டிவிட்டரிலாவது 31ம் தேதி புதுக் கட்சியை அறிவிப்பாரா ரஜினி.. துரத்தும் 'அழுத்தம்'

இதனிடையே, மூன்று "கருப்பு" வேளாண் சட்டங்களை எப்போது திரும்பப் பெறுவார் என்று பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.

"மோடி ஒரு கேள்விக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும். விவசாயிகள் இறக்கும் போது அவர் ஏன் அமைதியாக இருக்கிறார். விவசாயிகளின் வலியை அவரால் பார்க்க முடியவில்லையா? மூன்று கருப்பு சட்டங்களை அவர் எப்போது திரும்பப் பெறுவார்?". "பாஜக அரசு 'மோடி சர்க்கார்' அல்ல, மாறாக 'கம்பெனி சர்க்கார்'" இவ்வாறு, சுர்ஜேவாலா மேலும் கூறினார். எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கட்சியையும் ஊடகங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

English summary
Congress leader Priyanka Gandhi Vadra on Monday hit at the BJP government, saying it was a sin "to use the kind of words they are using for farmers". She said the central government was answerable to farmers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X