டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

WFH ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் ஜாக்பாட்? வருகிறதா சிறப்பு "அலொவன்ஸ்!" அறிவிப்பாரா நிர்மலா சீதாராமன்?

வீட்டிலிருந்தே பணிபுரியும் ஊழியர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 2023 பட்ஜெட்டில் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: வரும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2023 பட்ஜெட்டில், வீட்டிலிருந்தபடியே நிறுவனங்களுக்கு பணிபுரிந்து வரும் வொர்க் ஃப்ரம் ஹோம் ஊழியர்களின் நலன் கருதி சிறப்பு கொடுப்பனவு (Allowance) வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. Work From Home Allowance என்றால் என்ன என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.

வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கூட இருக்கிறது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்த பட்ஜெட்தான் மோடி 2.O அரசின் கடைசி முழு நீள பட்ஜெட் என்பது குறிப்பித்தக்கது. அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.

என் பைக்கை ஓவர்டேக் பண்ணுவியா? பொங்கிய 'குங்பூ' மாஸ்டர்.. தாக்கப்பட்ட ஜொமோட்டோ ஊழியர்.. பரிதாபம் என் பைக்கை ஓவர்டேக் பண்ணுவியா? பொங்கிய 'குங்பூ' மாஸ்டர்.. தாக்கப்பட்ட ஜொமோட்டோ ஊழியர்.. பரிதாபம்

பட்ஜெட் எதிர்பார்ப்புகள்

பட்ஜெட் எதிர்பார்ப்புகள்

இந்த பட்ஜெட்டில் குறிப்பாக வரிச் சலுகைகள் அறிவிக்கப்படுவதுடன், சாமானிய மக்கள் சுலபமாக வரியை தாக்கல் செய்வதற்கு ஏற்ப நடைமுறைகள் எளிமையாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமாக Work From Home Allowance திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய இருப்பதாக நிபுணர்கள் கணித்து இருக்கின்றனர்.

வொர்க் ஃப்ரம் ஹோம் அலொவன்ஸ்

வொர்க் ஃப்ரம் ஹோம் அலொவன்ஸ்

அதாவது நிறுவனங்களுக்காக வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்ய உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். வீட்டில் இருந்தபடியே பணிபுரியும் வொர்க் ஃபரம் ஹோம் முறையை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சில நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன.

கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு

இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகே பல நிறுவனங்களால் வொர்க் ஃபரம் ஹோம் முறை அமல்படுத்தப்பட்டது. நிறுவனங்களில் மொத்தமாக அனைவரும் பணிபுரிந்தால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் இருந்த காரணத்தால் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு லேப்டாப் கொடுத்து வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு அனுப்பி வைத்தன.

தொழிலாளர்களின் கோரிக்கை

தொழிலாளர்களின் கோரிக்கை

கொரோனா ஊரடங்கு வாபஸ் பெறப்பட்ட பிறகும் பல நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில் வீட்டிலிருந்தபடி பணிபுரியும் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

வரி சலுகை

வரி சலுகை

இந்த நிலையில்தான் வரும் பட்ஜெட்டில் இந்த திட்டம் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் வீட்டிலிருந்தபடியே நிறுவனங்களுக்காக பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக இந்த திட்டத்தின் கீழ் வீட்டிலிருந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் வரி சார்ந்த சலுகைகளை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

வரி விலக்கு விகிதம் உயர்வு

வரி விலக்கு விகிதம் உயர்வு

இதன் மூலமாக தொழிலாளர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை கூடுதலாக சேமித்து வைக்க முடியும். அத்துடன் 80C யின் கீழ் அளிக்கப்படும் வரி விலக்கில் உயர்வு அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த தகவல்கள் மத்திய நிதியமைச்சகத்தால் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
It has been reported that the Union government is planning to bring a special allowance scheme in the 2023 budget for work from home employees
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X