டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மறக்க முடியாத 2020: 100 ஆண்டுகளுக்குப் பின் உலகை உலுக்கிய பெருந்தொற்று கொரோனா

Google Oneindia Tamil News

டெல்லி: 100 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகை பேரழிவுக்குள்ளாக்கியிருக்கிறது கொரோனா பெருந்தொற்று நோய். மனிதகுல வரலாற்றில் பேரழிவின் உச்சம் தொட்ட ஆண்டு 2020.

2020-ம் ஆண்டு கொரோனா எனும் தொற்று நோயுடனேயே பிறந்தது. 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் மெதுமெதுவாக பரவ தொடங்கியது கொரோனா தொற்று.

நிறைந்து கிடந்த சடலங்கள்

நிறைந்து கிடந்த சடலங்கள்

2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் மனித உயிர்களை கொத்து கொத்தாக கொள்ளை கொண்டது கொரோனா. வீதிகளில் சடலங்கள் குவிந்து கிடந்தன.. அடக்கம் செய்ய முடியாத அளவுக்கு தெருக்களில் சடலங்கள் நிறைந்து கிடந்தன.

அமெரிக்கா, இந்தியாவில் பாதிப்பு

அமெரிக்கா, இந்தியாவில் பாதிப்பு

பின்னர் வளரும் நாடுகளில் விஸ்வரூபம் காட்டியது கொரோனா. உலகிலேயே வல்லரசு தேசமாகிய அமெரிக்காதான் உலகிலேயே கொரோனாவின் அகோரப்பிடியில் சிக்கி சிதைந்து போயிருக்கும் முதல் தேசம். இதற்கு அடுத்த 2-வது இடத்தில் இருக்கிறது இந்திய தேசம்.

5 கோடி பேருக்கு பாதிப்பு

5 கோடி பேருக்கு பாதிப்பு

இன்றைய கணக்குப்படி கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,66,60,473. கொரோனாவால் மாண்டு போனோர் எண்ணிக்கை 13,56,706. இதற்கு முன்னர் 1918-ம் ஆண்டு ப்ளூகாய்ச்சல் உலக நாடுகளில் சுமார் 5 கோடி மனித உயிர்களைக் குடித்தது.

பாதித்த பெருந்தொற்றுகள்

பாதித்த பெருந்தொற்றுகள்

இதேபோல் எய்ட்ஸ், சார்ஸ் போன்ற தொற்று நோய்கள் மனித உயிர்களை வேட்டையாடி இருக்கின்றன. 1968-ல் ப்ளூ-2 எனப்பட்ட சளிக்காய்ச்சல் 10 லட்சம் மனிதர்களை மரணிக்க வைத்தது. அதற்கு முன்னர் 1956-ல் ஆசியான் ப்ளூ 20 லட்சம் மனிதர்களை கொன்றது. இந்த பெருந்தொற்றுகளின் வரிசையில் 2020-ம் துயரம் தோய்ந்த ஆண்டாகிவிட்டது.

English summary
Here an article on World coronavirus pandemic in 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X