டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு... 2ஆம் இடத்தில் இந்தியா... உயிரிழப்பு 85,625ஆக உயர்வு!!

Google Oneindia Tamil News

டெல்லி: உலகளவில் கொரோனாவுக்கு 3,06,82,768 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,55,660 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 2,23,21,828 பேர் மீண்டு வந்துள்ளனர். இதுவரைக்கும் கொரோனாவுக்கு அமெரிக்காவில்தான் அதிகளவில் 69,24,126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,03,133 ஆக இருக்கிறது. உலகளவில் ஒரே நாளில் 311,411 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் கொரோனா தொற்று பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

ஆய்வகத்திலிருந்து லீக்.. சீனாவில் தீயாக பரவும் புதுவகை பாக்டீரியா.. தொற்று வந்தால் ஆண்மை அவுட்! ஆய்வகத்திலிருந்து லீக்.. சீனாவில் தீயாக பரவும் புதுவகை பாக்டீரியா.. தொற்று வந்தால் ஆண்மை அவுட்!

உயிரிழப்பு

உயிரிழப்பு

இதுவரைக்கும் கொரோனா பாதிப்பில் அமெரிக்காதான் முதல் இடத்தில் இருக்கிறது. இன்னும் இங்கு 2,533,830 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 920 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இந்த நோயில் இருந்து 4,187,163 பேர் மீண்டு வந்துள்ளனர். அந்த நாட்டில் மட்டும் பத்து லட்சம் பேருக்கு 20,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரைக்கும் 203,133 பேர் உயிரிழந்துள்ளனர்.

1,221 உயிரிழப்பு

1,221 உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில் தான் கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரைக்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53, 05,475 ஆக இருக்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85,625 ஆக இருக்கிறது. மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 4,205,201 ஆக இருக்கிறது. இன்னும் 1,014,649 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பத்து லட்சம் பேரில் 3,836 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். க்டன்தாஹ் 24மணி நேரத்தில் 1,221 பேர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே ஒரு நாள் உயிரிழப்பில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது.

மீண்டவர்கள்

மீண்டவர்கள்

இந்தியாவுக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் பிரேசில் உள்ளது. இங்கு கொரோனாவுக்கு இதுவரை 44,97,434 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,35,857 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்த நோயில் இருந்து 3,789,139 பேர் மீண்டு வந்துள்ளனர். 572,438 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பத்து லட்சம் பேரில் 63821,126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இறப்பு குறைவு

இறப்பு குறைவு

பிரேசிலை அடுத்து கொரோனாவுக்கு ரஷ்யாவில் 10,91,186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,195 ஆக குறைவாக இருக்கிறது. முதல் மூன்று இடத்தில் இருக்கும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் ரஷ்யாவில் இறப்பு விகிதம் குறைவாகவே இருக்கிறது. ரஷ்யாதான் முதன் முதலில் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பு ஊசியை அதிகாரபூர்வமாக பதிவு செய்துள்ளது. இந்தியாவில் இந்த ஊசியை தயாரிக்க டாக்டர் ரெட்டியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

புடின் மகள்

புடின் மகள்

ஸ்புட்னிக் வி தடுப்பு ஊசி தேவையான அனைத்து சோதனைகளிலும் வெற்றி கண்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டு இருந்தார்.அவரது மகளே இந்த தடுப்பு ஊசியை போட்டுக் கொண்டதாகவும் தெரிவித்து இருந்தார்.

பக்க விளைவு

பக்க விளைவு

ஸ்புட்னிக் வி தடுப்பூசி பரிசோதனைகள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடந்தது. தலா 38 மருத்துவ தன்னார்வலர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், அதன் பின் மூன்று வாரங்கள் கழித்து கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பொதுவான பக்க விளைவுகளான தலைவலி மற்றும் மூட்டு வலி ஆகியவை இருந்தபோதும் ரஷ்யாவில் இந்த தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து உள்ளது. இந்த நிலையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவுக்கு வருகிறது.

English summary
World Covid 19: Corona death in India beat america and Brazil
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X