உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 5,45,34,347 பேர் மீண்டனர் - 17,08,155 பேர் மரணம்
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுக்கு சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலகம் முழுவதும் 5,45,34,347 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி 17,08,155 பேர் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 7,76,81,825 பேராக ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2,14,39,323 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. கடந்த 11 மாதங்களுக்கும் மேலாக உலக மக்களை முடக்கிப்போட்டுள்ளது கொரோனா வைரஸ்.

உலக அளவில் கொரோனாவிற்கு அதிகம் பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். அமெரிக்காவில் கொரோனாவிற்கு 1,84,49,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து அமெரிக்காவில் 1,07,60,451பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,26,588 ஆக உயர்ந்துள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனாவிற்கு 72,64,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசில் நாட்டில் 62,86,980 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். பிரேசில் நாட்டில் 1,87,322 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுககு கொரோனா டெஸ்ட் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் உலகத்தின் பல பகுதிகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பல நாடுகளில் இரண்டாவது அலை வீசத்தொடங்கியுள்ளது. புதிய வகை கொரோனா தொற்று பரவத்தொடங்கியுள்ளதால் பல நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.