டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா இரண்டாம் அலை தீவிரம் - அமெரிக்கா, பிரிட்டனில் கொத்துக்கொத்தாக மரணம்

உலகம் முழுவதும் கொரோனாவில் இரண்டாம் அலை பரவத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவிலும், பிரிட்டனிலும், பிரேசில் நாட்டிலும் மரணமடைபவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவிற்கு ஒரே நாளில் 13,613 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் 22, 76,074 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில் நாடுகளில் கொரோனாவிற்கு மரணமடைபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

உலகம் முழுவதும் 469,912 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று தாக்கியவர்களின் எண்ணிக்கை 10,48,68,360 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 7,67,47,448 பேர் மீண்டுள்ளனர்.

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆட்டி படைத்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா


அமெரிக்காவில் ஒரே நாளில் 105,823 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தம் 2,71,42,066 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனாவிற்கு 3,633 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிற்கு மரணமடைந்தோர் 461,564 பேராக உயர்ந்துள்ளது.

பிரேசில்

பிரேசில்

பிரேசிலில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 53,164 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,339,420 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு ஒரே நாளில் 1,180 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு மரணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 227,563 பேராக உயர்ந்துள்ளது.

பிரிட்டன்

பிரிட்டன்

பிரிட்டனில் கொரோனாவிற்கு புதிதாக 19,202 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38,71,825 பேராக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,322 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். பிரிட்டனில் மொத்தம் 10,9,335 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

அதிகரிக்கும் மரணங்கள்

அதிகரிக்கும் மரணங்கள்

ரஷ்யாவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 526 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிற்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 74,684 பேராக அதிகரித்துள்ளது.
ஜெர்மனியில் ஒரே நாளில் 826 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 60,212 பேராக உயர்ந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் 565 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். அங்கு கொரோனாவிற்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 60,370 பேராக உயர்ந்துள்ளது.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 99ஆக உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,54,734 பேர் மரணமடைந்துள்ளனர். இதே போல இத்தாலி, தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, போர்ச்சுகல், கனடாவிலும் நூற்றுக்கணக்கானோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். புதிய தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய தொற்றுக்களும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Worldwide, 13,613 people died in a single day in Corona. Worldwide, 22,76,074 people have fallen victim to corona. The death toll from corona is rising in the United States, Britain and Brazil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X