உலகம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் 7,71,49,831 பேர் பாதிப்பு - 5,40,49,432 குணமடைந்தனர்
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதுவரை 7,71,49,831 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் 5,40,49,432 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி 16,99,099 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2,14,01,300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. கடந்த 11 மாதங்களுக்கும் மேலாக உலக மக்களை முடக்கிப்போட்டுள்ளது கொரோனா வைரஸ். உலக அளவில் கொரோனாவிற்கு அதிகம் பாதிக்கப்பட்டது அமெரிக்காதான்.

அமெரிக்காவில் கொரோனாவிற்கு 1,82,60,106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து அமெரிக்காவில் 1,06,17,646 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3, 24,844 ஆக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்கு 1,00,56,248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து இந்தியா முழுவதும் 96,05,390 பேர் குணமடைந்தனர். இந்தியாவில் கொரோனாவிற்கு 1,45,843உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 3,05,015 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரேசில் நாட்டில் கொரோனாவிற்கு 72,38,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசில் நாட்டில் 6,22,2,764 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். பிரேசில் நாட்டில் 1,86,764 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ்- அவசர கூட்டத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அழைப்பு
கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் உலகத்தின் பல பகுதிகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பல நாடுகளில் இரண்டாவது அலை வீசத்தொடங்கியுள்ளது. புதிய வகை கொரோனா தொற்று பரவத்தொடங்கியுள்ளதால் பல நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜூன் மாதத்தில் உலக அளவில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடி பேராக இருந்த நிலையில் நவம்பர் பல மடங்கு உயர்ந்து 5 கோடி பேராக உயர்ந்தது. 50 நாட்களுக்குள்ளாக கொரோனா பாதிப்பு அதிகரித்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 கோடி பேரை தொடப்போகிறது.