டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் விரைவில் இந்தியாவில் தொடக்கம்... பிரதமர் மோடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் விரைவில் தொடங்கப்படவுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதியளிக்கலாம் என்று இந்திய சிறப்பு நிபுணர் குழு பரிந்துரைத்தது.

Worlds Biggest Covid Vaccination Programme Set To Begin In India says PM

இதை ஏற்றுத் தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கோவிஷீல்ட்(சீரம்) மற்றும் கோவாக்சின் (பாரத் பயோடெக்) ஆகிய தடுப்பூசிகளுக்கு நேற்று அனுமதி அளித்து. இதையடுத்து இந்தியாவில் தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்னும் சில நாள்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசி வழங்கும் ஒத்திகையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிலையில், மக்களுக்குத் தடுப்பூசி அளிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற நேஷனல் மெட்ரோலஜி கான்க்ளேவ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாகக் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் விரைவில் தொடங்க உள்ளது.

அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகை- இயல்பாகவே கரையை கடப்பதுதான் புயல்.. இழுத்துவரும் தள்ளுவண்டி அல்ல!அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகை- இயல்பாகவே கரையை கடப்பதுதான் புயல்.. இழுத்துவரும் தள்ளுவண்டி அல்ல!

இதற்காக, உழைத்த அனைத்து ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்பைக் கண்டு, ஒட்டுமொத்த தேசமும் பெருமிதம் கொள்கிறது.

மேட் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்படும் தயாரிப்புகளுக்கு உலகளாவிய தேவை இருப்பதை மட்டுமின்றி, அவை உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.

எண்ணிக்கைகளைப் போலவே தரமும் முக்கியம். தற்சார்பு இந்தியா திட்டத்தில் நமது பயணத்தில் எண்ணிக்கைகளோடு சேர்ந்து நமது தயாரிப்புகளின் தரமும் உயர வேண்டும்" என்றார்.

English summary
Prime Minister Narendra Modi said on Monday that the world's biggest inoculation drive against coronavirus is set to begin in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X