• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

இந்தியாவின் நிலை கண்டு உலகமே அஞ்சியது.. ஆனால் மோடி தனது பிம்பத்தில் கவனமாக இருந்தார்.. ராகுல் தாக்கு

|

டெல்லி: ஒட்டுமொத்த உலகமே கொரோனா பெருந்தொற்று காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி மட்டும் தனது பிம்பத்தைக் கட்டமைப்பதிலேயே கவனமாக இருந்தார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையின் தீவிர தன்மை மிக அதிகமாகவே உள்ளது.

கொரோனா பரவலை மோடி அரசைக் கையாளும் விதம் குறித்து ராகுல் காந்தி, தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இது குறித்து அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்துள்ளார்.

பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்... அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை பின்னடைவு..!பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்... அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை பின்னடைவு..!

 இது ஒரு சுனாமி

இது ஒரு சுனாமி

இந்தியாவில் மருத்துவ உதவி, மருந்துகள், ஆக்சிஜன் ஆகியவற்றிற்காக மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தேசிய தலைநகரிலும், நாடு முழுவதிலும் நோயாளிகளுக்குத் தேவையான வசதிகள் இல்லை. இந்த நேரத்தில் அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளது?

பேரழிவை ஏற்படுத்தும் இந்த நிலையைப் பார்க்கும்போது, ஒவ்வொரு நாளும் என் இதயம் உடைகிறது. இது வெறும் சாதாரண ஒரு அலை அல்ல; இது ஒரு சுனாமி, இந்த சுனாமி எல்லாவற்றையும் அழித்துவிட்டது. எல்லா இடங்களிலும் முடிவில்லாத வரிசைகளில் மக்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் சிலிண்டரைப் பெற, சிலிண்டரை மீண்டும் ஆக்சிஜனை நிரப்ப, உயிர் காக்கும் மருந்துகளைப் பெற, மருத்துவமனைகளில் அனுமதியாக என அனைத்திற்கும் வரிசைகள் உள்ளன. இப்போது உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவும் வரிசைகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவை சமாளிக்க தேவையான அனைத்து பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள சிறந்த மருத்துவமனைகளிலும் நிலைமை மோசமாகவே உள்ளது, இந்தியாவின் சிறந்த மருத்துவர்கள் ஆக்சிஜன் உடனடியாக தேவை என SOSகளை அனுப்பி வருகின்றனர். ஆக்சிஜன் தேவை என உயர் நீதிமன்றங்களில் மருத்துவமனைகள் வழக்கு தொடர்கின்றன. நோயாளிகள் தங்கள் கண்களுக்கு முன்னால் இறப்பதை நமது சுகாதாரப் பணியாளர்கள் பார்க்கிறார்கள், அவர்களால் நோயாளிகளைக் காப்பாற்ற முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் மையம் கொண்டுள்ளது. இந்தியாவில் நடக்கும் விஷயங்களைக் கண்டு முழு உலகமே அஞ்சுகிறது.

இதில் எதுவும் நடந்திருக்கக் கூடாது. தொடக்கக் காலத்திலேயே பல எச்சரிக்கை அறிகுறிகள் இருந்தன. அறிகுறிகளைக்கூட விட்டுவிடுங்கள். ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கைகளையும் அரசு புறக்கணித்தது. நாம் இன்னும் சிறப்பாகத் தயாராக இருந்திருக்க முடியும். இப்போது, ​​இந்த நெருக்கடியான நிலையில் அரசு எங்கே? அரசிடம் இருந்து எவ்வித செயல்பாடுகளும் இல்லை. அவர்கள் பிரதமரின் பிம்பத்தை காப்பாற்றுவதிலும், மற்றவர்களைக் குறை கூறுவதிலும் மட்டுமே கவனம் கொண்டுள்ளனர். அனைவரும் சிஸ்டம் தோற்றுவிட்டது என்றே கூறுகின்றனர். இது யாருடைய சிஸ்டம்? இதை இயக்குவது யார்? பொறுப்பைத் தவிர்ப்பதற்கான ஒரு சூழ்ச்சி இது.

 தவறு யாருடையது

தவறு யாருடையது

கொரோனா நிலைமையை மதிப்பிடுவதில் அரசு தவறியதா? யார் மீது இதில் தவறு உள்ளது?

முற்றிலுமாக தோல்வியடைந்துவிட்டது.. பிரதமர் மீது தான் தவறு உள்ளது. அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ள ஓர் அரசை அவர் நடத்தி வருகிறார், பிரச்சினைகளைச் சரி செய்வதை காட்டிலும் பிம்பத்தை உருவாக்குவதற்கே அதிகம் கவனம் செலுத்துகிறார். தொடக்கம் முதலே பலமுறை எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், இந்த அரசு கொரோனா தொற்றைப் புரிந்து கொள்ளவோ ​​அல்லது சமாளிக்கவோ முற்றிலும் தவறிவிட்டது. 2020இல் கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்தே, நாம் சரியாகத் தயாரான முறையில் தாயாராக வேண்டும் என அரசை நான் எச்சரித்தேன். ஆனால் அவர்கள் என்னைத் தாக்கி கேலி செய்தனர். நான் மட்டுமல்ல அனைவரது எச்சரிக்கைகளையும் அரசு புறக்கணித்துவிட்டது. 2020 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மோடி அரசு விமானங்கள் வழியாக இந்த வைரசை இந்தியாவுக்குள் நுழைய அனுமதித்தது. பின்னர், பீதியால் எவ்வித ஆலோசனை அல்லது சிந்தனை இல்லாமல் உலகின் கடுமையான ஊரடங்கை அறிவித்தார்கள்.

குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களை தாங்களே தற்காத்து வேண்டியிருந்தது. அவர்கள் நகரங்களிலிருந்து வெளியேறத் தொடங்கினர். ஏழைகளில் எந்த உதவியும் இல்லாமல் பல நூறு கிலோமீட்டர் நடந்தே அவர்களின் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது மகாபாரத போரைப் போல 21 நாட்களில் இந்த வைரஸை தோற்கடிக்கப் போகிறேன் எனப் பிரதமர் தனது அறியாமையில் கூறினார். அகம்பாவம் கொண்ட மோடி அரசு யதார்த்தத்தில் கவனம் செலுத்தவில்லை. வைரசை வென்றுவிட்டதாக அறிவிப்பது முழுமையான என்பது சரியான ஒரு செயல் இல்லை. இந்த வைரஸ் பற்றி அவர்களது தவறான புரிதலையே இது நிரூபிக்கிறது.

இந்த கொரோனாவை பணிவுடன் எதிர்த்துப் போராடுவதே ஒரே வழி. உங்கள் எதிரி அனைத்து சூழ்நிலைகளுக்கும் ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்ளக் கூடிய ஒன்று என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நெருக்கடியைச் சிறப்பாக எதிர்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் பிரதமருக்கு ஒரு முழு ஆண்டு இருந்தது, ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்? பிரதமரும் அரசும் போதுமான ஆக்ஸிஜன் திறனை ஏற்படுத்தியுள்ளனரா? மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிகப்படுத்தப்பட்டதா, வென்டிலேட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டதா? நமது நாட்டின் சுகாதார உள்ளக்கடைமைப்பு நிலை குறித்துச் சிந்தித்து, பிரதமர் மோடி கொரோனா அலைகளின் இருந்து நாட்டை காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தாரா?

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பிலிருந்து அதிர்ஷ்டவசமாக நாம் வெளியேறினோம். அப்போதும் நாம் போதுமான கொரோனா சோதனை செய்யவில்லை. இப்போதும் செய்யவில்லை. இந்த மிகப்பெரிய இரண்டாவது அலையிலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? கடந்த ஆண்டு கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரிய அரங்குகள் அகற்றப்பட்டது ஏன்? இந்த மிருகத்தனமான இரண்டாவது அலைக்கு முன், ஆக்சிஜன் ஏற்றுமதியை 700% க்கு மேல் உயர்த்தப்பட்டது ஏன்?

 என்ன நடவடிக்கை

என்ன நடவடிக்கை

இரண்டாவது அலையைச் சமாளிக்க அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம்?

மோடி அரசு மிகவும் அலட்சியமாகவும், கண்மூடித்தனமாக அதிக நம்பிக்கையுடனும் இருந்தது. பாஜக கொரோனா முடிந்துவிட்டதாக அறிவித்து, இரண்டாவது அலை தொடங்கிய போதும் அவர்கள் கொரோனாவை வீழ்த்தியதாகப் பிரதமருக்கு வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிரதமரே இந்தியா கொரோனாவை எதிர்த்துப் போராடி வெற்றி கொண்டதாகக் கூறியுள்ளார். ஆனால் உண்மையில், இங்குத் தெளிவான திட்டம் எதுவும் இல்லை.

கொரோனா சோதனை, ஆக்சிஜன் வசதி, மருத்துவமனையில் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் என அனைத்தையும் அரசு கடந்த ஓர் ஆண்டில் அதிகரித்திருக்க வேண்டும். அவர்கள் முன்கூட்டியே வெற்றியை அறிவித்திருக்கக்கூடாது. பிரதமரும் அவரது அரசும் இப்படியொரு பிரச்சினை இருப்பதைக்கூட ஒப்புக் கொள்ளவில்லை. பிரச்சினை இருப்பதையே நீங்கள் ஏற்றுக்கொள்ளாத போது அதை எப்படிச் சரிசெய்வது? அரசு, ஆராய்ச்சியாளர்களின் ஆலோசனையின் அடிப்படையில் செயல்படவில்லை.

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வழக்குகளைப் புறக்கணித்து, தேர்தல் பிரச்சாரங்களில் அவர்கள் பிஸியாக இருந்தனர். சூப்பர்-ஸ்ப்ரெடர் நிகழ்வுகளை அவர்களே ஊக்குவித்தனர். தங்களை தாங்களே புகழ்ந்துகொண்டனர். நமது பிரதமரும் உள்துறை அமைச்சரும் கடந்த சில மாதங்களாகவே பொது இடங்களில் மாஸ்க்குகளை அணியவில்லை. இதன் மூலம் அவர்கள் பொதுமக்களுக்குக் கூற வருவது என்ன? முக்கியமாகத் தடுப்பூசி மட்டுமே தற்போது நம்மிடம் உள்ள ஒரே தீர்வு. இங்குதான் உலகளவில் அதிக தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்தாலும்கூட இந்தியாவில் தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நமது தடுப்பூசியில் நமது நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாதது ஏன்? செயல்படுத்துவதில் வந்த தோல்வி தானே இது.

 அவசர நிலை

அவசர நிலை

எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தினசரி 4 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுகிறது. இந்த நிலையில் தேசிய அவசர நிலைக்குத் தேவை எழுகிறதா?

நாம் ஏற்கனவே ஒரு தேசிய அவசரநிலைக்கு மத்தியில் தான் இருக்கிறோம். ஆனால் வெறுமென ஒன்றை அறிவிப்பதும் மட்டும் இதற்கான பதில் இல்லை. இந்த அரசின் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், இவர்கள் ஒன்றை அறிவித்துவிட்டு, காணாமல் போகிவிடுவார்கள். இப்போது நிலைமை முற்றிலுமாக கட்டுப்பாட்டை மீறி விட்டதால், முழு பொறுப்பையும் மாநிலங்களுக்குத் தலையில் சுமத்திவிட்டனர். அப்போது அவர்கள் மாநிலங்களையும் மக்களையும் உண்மையிலேயே ஆத்மனிர்பர் ஆக ஆக்கியுள்ளனர். உங்களை மட்டுமே நீங்கள் நம்ப வேண்டும். உங்களுக்கு உதவ யாரும் வரமாட்டார்கள். நிச்சயமாக, பிரதமர் வரமாட்டார். அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்வதே இப்போதைய தேவை.

உலகிலேயே வைரசை எதிர்த்துப் போராடுவதற்கும் மக்களைப் பாதுகாப்பதற்கும் வல்லுநர் அல்லது அதிகாரம் பெற்ற குழுவின் வழிகாட்டுதலின்றி இருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டும்தான்.

 யார் பொறுப்பு

யார் பொறுப்பு

இரண்டாவது அலை பற்றி மாநிலங்களுக்கு மீண்டும் மீண்டும் மத்திய அரசு எச்சரித்தது. ஆக்சிஜன், ஐ.சி.யு படுக்கைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை அதிகப்படுத்த அறிவுறுத்தியது. இருப்பினும், இப்படியொரு நிலை ஏற்பட்டுள்ளது என்றால் அதற்கு மத்திய மாநில அரசுகளின் கூட்டுத் தோல்வி தானே பொறுப்பு?

கடந்த ஓர் ஆண்டாகவே நாட்டில் பெருந்தொற்று சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் மாநிலங்கள் மீது மத்திய அரசுக்கு முழுமையான அதிகாரம் உள்ளது. எல்லாவற்றையும் கட்டுப்படுத்த விரும்பும் அரசு இது. கொரோனா வழக்குகள் குறைந்தபோது, அவர்கள் வெற்றியை அறிவித்தனர், பிரதமர் எப்போதும் போல தானே அனைத்திற்கும் காரணம் என்று கூறிக்கொண்டார். இப்போது நிலைமை பயங்கரமாகிவிட்டது. இப்போது மட்டும் நீங்கள் ஏன் மாநிலங்களைக் குறை கூறுகிறீர்கள்? மத்திய அரசு கடந்த அக்டோபரில் அறிவித்த 162 ஆக்சிஜன் ஆலைகளில், 33 மட்டுமே செயல்படுகின்றன. இதுவும் PM-CARES நிதியில் அமைக்கப்பட்டது.

மோடி அரசு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை நன்கொடைகள் என்ற பெயரில், எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் எடுத்துக் கொண்டது. இந்த நிதிகள் மூலம் மத்திய அரசு கொள்முதல் செய்து, வழங்கிய தரமற்ற வென்டிலேட்டர்களை மாநில அரசுகள் நிராகரித்தன. மாநில அரசுகள் தங்கள் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையைக்கூடச் சரியான நேரத்தில் பெறுவதில்லை.

ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மற்றும் டோசிலிசுமாப் ஊசி என அனைத்திற்கும் மத்திய அரசையே மாநில அரசுகள் நம்பியுள்ளன.மாநில அரசுகள் இப்போது முற்றிலும் சக்தியற்றவை. இப்படியிருக்கும்போது பிரச்சினைகளை அவர்களால் எப்படி கையாள முடியும். சிஸ்டம் சீரழந்துவிடும்,

 கொரோனா தடுப்பூசிகள்

கொரோனா தடுப்பூசிகள்

நீங்கள் கூறியதைப் போல மே 1 முதல் 18+ அனைவருக்கும் தடுப்பூசி பணிகள் தொடங்குகின்றன, ஆனால் தடுப்பூசிகள் இல்லாததால் பல மாநிலங்கள் அதைத் தொடங்க முடியாது என்று கூறுகின்றன. உங்கள் பார்வை என்ன? பிரிட்டன் நாட்டில் கூட ஜூன் முதலே 18+ அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது?

முதலில் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 300 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்தது. இது 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள். ஆனால் மொத்த மக்கள்தொகையில் 2 சதவிகிதம் மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட முடிந்தது. இந்நிலையில் அழுத்தம் அதிகரித்ததால் மே 1 முதல் 18+ அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மேலும் 600 மில்லியன் மக்களை இந்த பட்டியலில் சேர்த்தனர்.

ஆனால் தடுப்பூசிகள் எங்கே? 18 முதல் 44 வயதுக்குட்பட்ட தடுப்பூசி கொடுக்க மறுத்து மோடி அரசு அவர்களைக் கைவிட்டது ஏன்? தடுப்பூசிகளின் விலை நிர்ணயம் குறித்து ஏன் இங்குப் பாரபட்சமான கொள்கை? ஒரே தடுப்பூசிக்கு ஐந்து வெவ்வேறு விலைகள் ஏன் இருக்க வேண்டும்? கிட்டத்தட்ட 100 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த 2 நிறுவனங்கள் போதுமா? நமக்கு 200 கோடி தடுப்பூசி டோஸ் தேவை. இப்போது தான்​அவர்கள் தடுப்பூசிகளைத் தேடுகின்றனர்.

 தடுப்பூசி விலை

தடுப்பூசி விலை

தடுப்பூசி கொள்கை பாரபட்சமானது என்று நீங்கள் கூறினீர்கள். இப்போது தடுப்பூசி விலையை மருந்து நிறுவனங்கள் குறைத்துள்ளன. உங்கள் கருத்து?

இது தள்ளுபடி விற்பனையைப் போன்றது. முதலில் விலையை அதிகமா கூறிவிட்டு, பின்னர் குறைப்பதைப் போலக் காட்டுகிறார்கள். இது முழுமையான வெற்று நடவடிக்கை. தடுப்பூசிகளுக்கு மத்திய அரசைவிட மாநிலங்கள் ஏன் அதிக கட்டணம் செலுத்த வேண்டும்? மாநிலங்கள் ஏன் தனித்துவிடப்பட வேண்டும்?மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான வெவ்வேறு விலைகளில் ஏன் தடுப்பூசி விற்பனை செய்ய வேண்டும்? இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே கூட தடுப்பூசியின் விலை ஏன் வித்தியாசமாக இருக்க வேண்டும்? ஏன் முரண்பாடு? எல்லாவற்றிற்கும் மேல், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போட மாநில அரசுகள் பணம் செலுத்த வேண்டும். அதுவும் மக்களின் வரிப் பணம் தானே.

 கட்டாய லைசென்ஸ் முறை

கட்டாய லைசென்ஸ் முறை

காங்கிரஸின் பலமுறை வலியுறுத்தியும், கட்டாய லைசென்ஸ் முறையை அரசு ஏன் அமல்படுத்தவில்லை?

டாக்டர் மன்மோகன் சிங் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கட்டாய லைசென்ஸ் முறை அமல்படுத்த வேண்டும் என்றார். காங்கிரஸ் தலைவரும் பலமுறை இதைத்தான் வலியுறுத்தினார். மற்ற நாடுகள் இதைச் செய்துள்ளன. அமெரிக்கா தனது தடுப்பூசி உற்பத்தி தனக்குக் கிடைப்பதை உறுதி செய்யப் பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தைப் பயன்படுத்தியுள்ளது. தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க நம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்ய வேண்டும். இந்தியா மற்றும் உலகிற்குத் தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்யும் ஆற்றல் நம்மிடம் உள்ளது. இப்போது அனைத்து நிறுவனங்களுக்கும் லைசென்ஸ் மற்றும் மூலப்பொருட்கள். இது மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

 அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்

அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகக் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. அதைக் கொஞ்சம் விளக்குங்கள்?

முதல் நாளிலிருந்தே கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகக் காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. கடந்த சில நாட்களில் கூட, காங்கிரஸ் தலைவர் இந்த நிலைப்பாட்டை மிகத் தெளிவாக மீண்டும் மீண்டும் கூறினார். நாங்கள் எங்கள் பரிந்துரைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம். அவற்றைப் பரிசீலனை செய்வதை விட்டுவிடுங்கள். இந்த பரிந்துரைகளை அர்த்தமுள்ளதாக ஒப்புக் கொள்ளக் கூட அவர்கள் தயங்குகிறார்கள்.

முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியின் காலங்களில் அரசுடன் இணைந்து பணியாற்றுவதில் எந்த முரண்பாடும் இல்லை, அதே நேரத்தில் அரசு அதன் முடிவுகளுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். அரசு ஆலோசனையை ஏற்காதபோது, ​​அனைவரையும் அழைத்துச் செல்வதில் சிக்கல் எழுகிறது. உதவி தேவை என்பதை ஒப்புக்கொள்வது பலவீனத்தின் அடையாளமாக இந்த அரசு பார்க்கிறது. இந்த அரசின் செயல்பாடுகள் நம்பமுடியாத வகையில் உள்ளது.

 உயர் நீதிமன்றம் கருத்து

உயர் நீதிமன்றம் கருத்து

தற்போதுள்ள கொரோனா நிலைமைக்குத் தேர்தல் ஆணையத்தைச் சென்னை உயர் நீதிமன்றம் பொறுப்பேற்றுள்ளது. இது பற்றி உங்கள் கருத்துக்கள்?

பரவலாக முன் வைக்கப்படும் கருத்தை நீதிமன்றம் எதிரொலித்ததுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில், பல சுயாட்சி அமைப்புகளைப் போலவே, இந்திய தேர்தல் ஆணையமும் செயலிழந்துவிட்டது. நீதிமன்றம் அந்த கருத்தை நம்புகிறதாகக் கூறியுள்ளது. அது பற்றி நான் கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை. மக்கள் தீர்ப்பளிக்கட்டும்.

நமது அமைப்புகள் எச்சரிக்கை தரும் அமைப்புகள். நெருக்கடி ஏற்படும்போது எப்படிச் செயல்பட வேண்டும் என அவர்கள் நமக்கு ஆலோசனை தருவார்கள். ஆனால் அந்த அமைப்புகள் இப்போது முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. பத்திரிகைகள், நீதித்துறை, தேர்தல் ஆணையம், என அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. அதாவது இந்தியாவில் இன்று புயலில் எவ்வித தகவலும் இல்லாமல் பயணம் செய்கிறது.

கொரோனா பிரச்சினையின் ஒரு பகுதியாகும். உண்மையான பிரச்சனை என்னவென்றால், கடந்த 6 ஆண்டுகளில் அதன் அமைப்புகளில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்போது எந்தவொரு பெரிய நெருக்கடிக்கும் பதிலளிக்கும் திறன் இந்தியாவுக்கு இப்போது இல்லை.

 காங்கிரஸில் உள்ளாட்சித் தேர்தல்

காங்கிரஸில் உள்ளாட்சித் தேர்தல்

புதிய காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுக்க உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் கோரிக்கையை எழுந்துள்ளது? இதுபோன்ற காலங்களில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வழிநடத்தத் தயாரா? குறிப்பாக பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்த கோரிக்கைகள் எழுந்துள்ளபோது?

காங்கிரசில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதற்கே நான் ஆதரவாக இருந்துள்ளேன். இவை சரியான நேரத்தில் நடத்தப்படும். கட்சியை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்து கட்சித் தொண்டர்கள் தீர்மானிக்க வேண்டும். கட்சி என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்வேன். ஆனால் இப்போதே தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது, மக்கள் உயிர்களைக் காப்பாற்றுவது மற்றும் இந்தியாவின் துன்பங்களையும் வேதனையையும் துடைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அனைத்தும் சரியான நேரத்தில் நடக்கும்.

English summary
Rahul Gandhi's latest interview with PTI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X