இரண்டாம் உலக போரின் போது மாயமான அமெரிக்க விமானம்.. 77 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலையில் கண்டெடுப்பு!
டெல்லி: இரண்டாம் உலக போரின் போது காணாமல் போன அமெரிக்க விமானம் இந்தியாவின் இமயமலைத் தொடரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது உலக போர் 1939 ஆம் ஆண்டு தொடங்கி 1945 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அந்த சமயம் இந்தியா, சீனா, மியான்மர் உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் விழுந்து காணாமல் போயின.
அந்த வகையில் சீனாவின் குன்மிங்கிலிருந்து 1945 ஆம் ஆண்டு 13 பேரை ஏற்றிக் கொண்டு அமெரிக்காவுக்கு சொந்தமான சி46 என்ற புறப்பட்டது. இது புறப்பட்ட சில மணி நேரங்களில் ரேடாருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
பஞ்சாப் தேர்தலுக்கு சில வாரங்கள் முன்..உலக புகழ்பெற்ற காளி கோயிலில் நடந்த ஷாக் சம்பவம்! பரபர வீடியோ

மோசமான வானிலை
மாயமான விமானம் எங்கு போனது என யாருக்கும் தெரியாமல் இருந்தது. எனினும் மோசமான வானிலை காரணமாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இமயமலை பகுதியில் விழுந்திருக்கலாம் என கூறப்பட்டது. மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவரின் மகன் பில் ஸ்கீரர் தற்போது இறங்கியுள்ளார்.

விமானத்தை தேடும் பணி
கடந்த 2018ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் இந்த விமானத்தை தேடும் முயற்சியின் போது பனிப்புயலில் சிக்கி 3 வழிகாட்டிகள் (கைடு) இறந்துவிட்டனர். மேலும் சிலர் எதையும் கண்டுபிடிக்காமல் நாடு திரும்பிவிட்டனர். இதையடுத்து அந்த விமானத்தை தேடும் பணியை சாகச வீரர் கிளேட்டன் குக்லெஸிடம் ஒப்படைத்திருந்தார்.

விமான பாகம்
அதன் அடிப்படையில் தனது குழுவினருடன் குக்ஸெல் இமயமலையில் முகாமிட்டு விமானத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த பயணத்தில் குக்லெஸ் உள்ளூர் வழிகாட்டிகள் குழுவுடன் இணைந்து தேடினார். கடும் முயற்சியின் பலனாக பனி மூடிய பகுதியில் கிடந்த போர் விமான பாகத்தை இந்த குழு நேற்று கண்டுபிடித்தது.

வால்பகுதி எண்
பனி படர்ந்த பாறைகளுக்கு நடுவே விமான வால்பகுதியில் இருந்த குறியீட்டு எண்ணை அடையாளம் காண முடிந்தது. இந்த வகையில் 77 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிளெட்டன் குக்லெஸ் கூறுகையில் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விமான பாகங்களில் மனிதர்களின் உடல் உறுப்புகள் ஏதும் இல்லை என்றார்.

தந்தை இல்லாமல் வளர்ந்தேன்
இதுகுறித்து பில் ஸ்கிரெர் கூறுகையில், நான் எனது தந்தை இல்லாமலேயே வளர்ந்தேன். இந்த விமானம் காணாமல் போன போது எனது ஏழை தாயை நினைத்து பார்க்கிறேன். என் எனது தந்தை பயணித்த விமானம் மாயம் என எனது தாய்க்கு ஒரு தந்தி வந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த என் தாய் , 13 மாத குழந்தையான என்னை விட்டுவிட்டு நடந்ததை அறிய சென்றார். இத்தனை நாட்கள் என் தந்தை எங்கே இறந்திருப்பார் என தெரியாமல் இருந்தது. தற்போது அவர் இறந்த இடம் தெரிந்துள்ளதால் துக்கத்திலும் ஒரு மகிழ்ச்சி உள்ளது என்றார்.